இந்திய கடற்படைக்கு சொந்தமான பாரிய கப்பல்களான விக்கரமாதித்யா கப்பல் மற்றும் மைஸுர் யுத்தக்கப்பல் ஆகிய இரண்டு கப்பல்களும் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளன.
குறித்த கப்பல்கள் இரண்டும் எதிர்வரும் 24ம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என இலங்கை கடற்படையின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கத்தை அதிகரித்துக்கொள்ளவதற்காக குறித்த கப்பல்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.