விக்ரம் பிரபுவின் அடுத்த படம்.......!
பல வெற்றித் திரைப்படங்களை தந்த விக்ரம் பிரபு தற்போது அடுத்த படத்திற்கு தயாராகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கும்கி படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி அரிமா நம்பி, இவன் வேற மாதிரி போன்ற வெற்றித்திரைப்படங்களில் நடித்தவர் விக்ரம் பிரபு.
தற்போது இவர் நடித்த வீர சிவாஜி, வாகா போன்ற திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறைவுக் கட்டத்தை எட்டயுள்ளன. இந்த நிலையில் அடுத்ததாக விக்ரம் பிரபு '' சுந்தரபாண்டியன்''படத்தின் இயக்குனர் பிரபாகரன் இயக்கவிருக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் பூஜைகள் கடந்த 20 ம் திகதி இடம்பெற்றது. திரைப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார்.
இது பற்றி விக்ரம் பிரபு கூறுகையில்,இந்தபடத்தில் ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் நான் நடிக்கின்றேன்.ஒரு உண்மை சம்பவமே படமாக்கப்படுகிறது. பிரபாகரன் என்னை இந்த படத்தில் வித்தியாசமாக பாத்திரத்தில் காட்டுகிறார்.
இந்த படம் பற்றி இயக்குனர் பிரபாகரன் கூறும்போது இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் திருச்சியிலும்,சென்னையிலும் இடம்பெறவுள்ளதாக தெரிவித்தார்.