உலக நாயகன் கமல் நடிப்பில் உருவான உத்தம வில்லன் பெரிய தோல்வியை தழுவியதன் விளைவாக பல இழப்புகளை சந்தித்த லிங்குசாமி இப்போது ரஜனி முருகன் படம் பெரிய வெற்றியை பெற்றதன் மூலம் கொஞ்சம் தலை நிமிர்ந்து நிற்கிறார்..
இந்த நிலையில் , லிங்குசாமியுடன் கமல் மீண்டும் இணையப்போவதாக கொலிவூட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது .திரும்பவுமா என்று லிங்கசாமி ரசிகர்கள் பக்கம் இருந்தும் சிலர் விமர்சிக்கின்றனர் இருந்தும் கமல் பெரிய வெற்றியை இந்த தடவை பெற்றுக்கொடுப்பார் என்று நம்பிக்கையில் லிங்குசாமி உள்ளார்.கமலுக்காக இரவு பகல் கண் விழித்து ஒரு வித்தியாசமான கதையை தயார் படுத்தி உள்ளாராம் லிங்குசாமி. அந்தக்கதையில் கமல் நடிக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கபடுகிறது.