3,900 Views
காரணம்… சேதுபதி ஐபிஎஸ் என்ற பெயரில் பி.வாசு இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த படத்தை ஏற்கனவே ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருக்கிறது.எனவே, ஏவிஎம் நிறுவனத்திடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற்று சேதுபதி என்ற தலைப்பை சூட்டியுள்ளனர்.
விஜய்சேதுபதியை வைத்து ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கிய அருண்குமார் இந்தப்படத்தை இயக்குகிறார். ‘வான்சன் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் ஷான் சுதர்சன் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
‘தெகிடி’ படத்திற்கு இசை அமைத்த நிவாஸ் கே.பிரசன்னா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். ‘பீட்சா’ படத்திற்கு பிறகு விஜய்சேதுபதியும், ரம்யா நம்பீசனும் சேதுபதி படத்தில் மீண்டும் ஜோடியாக நடித்துள்ளனர்.
‘சேதுபதி’ படம் பற்றி விஜய்சேதுபதியிடம் பேசியபோது, உற்சாகமாக மட்டுமல்ல நம்பிக்கையுடனும் பேசினார்.. ‘‘இந்த போலீஸ் கதையை அருண் குமார் சொல்லும்போது இந்த கதையும், கேரக்டரும் எனக்கு ‘செட்’டாகுமானுதான் முதல்ல யோசித்தேன்.
பிறகு ஒருவித தயக்கத்தோடத்தான் நடிக்க ஒப்புக்கொண்டேன்.படப்பிடிப்பு துவங்கிய பிறகு படத்திற்கு என்ன டைட்டில் வைப்பது என்ற டிஸ்கஷன் நடந்தபோது அருண்குமார் ‘சேதுபதி’ங்கற தலைப்பு ரொம்ப பொருத்தமாக இருக்கும், அதை வைக்கலாம் என்று சொன்னார்.
அவர் ‘சேதுபதி’ என்ற டைட்டிலை சொன்னதும் எனக்கு ஒருவித பயம் வந்துருச்சு. ஏனா நாம ரொம்ப ஓவரா போறோமோன்னு! படம் ஏதாவது ஆச்சுனா அவ்வளவுதான்! மொத்தமும் எனக்குத்தான் கிடைக்கும்! ‘சேதுபதி’ங்கற தலைப்பு வேண்டாம்னு சொன்னேன்.
ஆனால் இயக்குநர் அருண்குமாரும், ஒளிப்பதிவாளர் தினேஷும் அந்த தலைப்பில் உறுதியாக, நம்பிக்கையோட இருந்தாங்க! அதனால கடைசியில நானும் ஒத்துக்கிட்டேன். ‘பீட்சா’ படத்திற்கு பிறகு மீண்டும் இப்படத்தில் நானும், ரம்யா நம்பீசனும் இணைந்து நடித்துள்ளோம். ரம்யா நல்ல நடிகை! அவங்களுக்கு ஈடு கொடுத்து நடிக்கிறது ரொம்ப கஷ்டம்.
அவங்களை ‘பீட்சா’ படத்திற்கு பிறகு இப்போதான் பார்க்கிறேன். ‘சேதுபதி’யில் நானும், ரம்யாவும் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவா, அம்மாவா நடிச்சிருக்கோம்’’
===கோடம்பாக்க கிழவி ====