12,957 Views
நீண்ட நாட்களுக்கு முன் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பான தொகுப்பொன்று எமது ஹிரு டிவியின் நிகழ்சியில் அண்மையில் ஒளிபரப்பாகியது.
இதன்படி, குறித்த பிள்ளை சிறுவயது முதலே தனது விரல்களை தானே கடித்து உண்ணும் ஒருவகை விநோத நிலையால் பாதிக்கப்பட்டிருந்துள்ளது.
ஆரம்பத்தில் குழந்தையின் உடலில் இரத்தம் வருவதை கண்ட பெற்றோர் ஏதோ பூச்சி கடித்திருக்கலாம் என நினைத்திருந்துள்ளனர்.
பின்னர் குழந்தையின் நிலையை அறிந்துகொண்ட பெற்றோர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை வைத்தியர்கள் காயங்களுக்கு மருந்திட்டு அனுப்பியுள்ளனர்.
எனினும் அவர்களாலும் இந்நிலையை புரிந்துகொள்ள முடியாமல் போயுள்ளது.
இதன்பின்னர் பிள்ளை தனது உதடுகளை கடித்து உண்ண ஆரம்பித்துள்ளது.
உடல் முழுவதும் இரத்த த்தில் தோய்ந்த நிலையில் காணப்பட்ட குழந்தையை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் பெற்றோர்.
பின்னர் தமதுக்கு இதற்கு தீர்வில்லை என்பதை புரிந்துகொண்ட அவர்கள் வணக்கஸ்தலங்களில் தமது பிள்ளைக்கான தீர்வை தேடிச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
எனினும் பிள்ளையின் நிலை மாறவில்லை. இதனாலேயே ஒருநாளில் அப்பிள்ளை உலகை விட்டுச் சென்றுவிட்ட து.
இச்சோக கதையின் காணொளித் தொகுப்பு கீழே…