6,680 Views
ஹோமாகம நீதிவான் நீதிமன்ற நீதவான் பிணைக் கோரிக்கையை நிராகரித்தார்.
ஞானசார தேரருக்கு பிணை வழங்குவதற்கான போதிய காரணிகள் மனுவில் இல்லை என்று எனக் குறிப்பிட்ட ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க, பிணை வழங்க மறுப்பு தெரிவித்தார்.
அந்த அறிவிப்பை தொடர்ந்து நீதவான் ரங்க திஸாநாயக்க பரபரப்பான கருத்தொன்றையும் வெளியிட்டார்.
அவர் தெரிவித்த கருத்து வருமாறு: ' எனது தலையில் துப்பாக்கியை வைத்து உத்தரவை மாற்றச் சொன்னாலும் அதனை நான் மாற்ற மாட்டேன். என்னில் தவறுகள் இருப்பின் மேலதிகாரிகளுக்கு அதனை தெரியப்படுத்துங்கள். இந்த வழக்கை பொறுத்தவரை விசாரணைகளை நான் மேற்கொள்ளக் கூடாது என்பதே எனது அபிப்பிராயமாகும்” என்றார். மேலும்
இது தொடர்பாக தான் சட்ட மா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந் நிலையில் ஞானசார தேரரின் பிணை கோரிக்கையும் நிராகரிக்கப்ப்ட்டுள்ள நிலையில் அவர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.