விஜய்யின் அடுத்த படத்தில் உண்மையான தயாரிப்பாளர் யார்..?? கத்தியின் வெற்றியை தொடர்ந்து இளையதளபதி "விஜய் 58" எனும் பெயர் சூட்டப்படாத தன் அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் இந்த "விஜய்58" படம் சரித்திரக்கதை சார்ந்ததாய் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. இந்த செய்தி உண்மையாய் இருக்கலாம் என உணர இந்தப் படத்தின் இயக்குனர் காரணமாவது முக்கியமானது.
இயக்குனர் சிம்புதேவன் இம்சை அரசன் 23-ம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் போன்ற சரித்திரக்கதை சார்ந்த படங்களை இயக்கியவர். அவரே விஜய்யை வைத்து இந்தப் படத்தையும் இயக்குவதால் கசிந்துள்ள செய்தியின் உண்மைத் தன்மை நம்பும்வகையில் அமைந்துள்ளதாம்.
அத்தோடு முதலாவது படப்பிடிப்பாக, பாடல் காட்சி ஒன்று சென்னை கிழக்குக் கடற்கரைச்சாலை பிரதேசத்தில் மிகப்பிரம்மாண்டமான செட் போடப்பட்டு படமாக்கப்படுகின்றதாம். 100 நடனக் கலைஞர்கள் இணைந்த இந்தப்பாடல் காட்சியில், நாயகியாக நடிக்கும் ஹன்ஷிகா இளவரசிக்குரிய தோற்றத்தில், அதற்குரிய ஆடை அலங்காரத்தில் நடித்திருக்கிறாராம். இந்தப் படப்பிடிப்பு பற்றி ஹன்சிகாவே தன் ருவிட்டர் தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதுவும் வெளியாகியுள்ள செய்திக்கு வலுவூட்டுவதாக உள்ளதாம்.
இந்தநிலையில் இந்தப்படத்திற்கான இசையை தேவி ஸ்ரீ பிரசாத் வழங்க, தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு தேவதையாக ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகை ஸ்ரீதேவி ஹன்சிகாவுக்கு அம்மா வேடம் ஏற்றிருக்கிறாராம் இந்தப்படத்தில். ஹன்சிகா மட்டுமல்லாமல் ஸ்ருதி ஹாசனும் இந்தப்படத்தில் விஜய்யோடு இணைந்து நடிக்கிறாராம்.
இந்த "விஜய்58" படத்தின் முதலாவதாக படமாக்கப்பட்ட இந்த ஒரேஒரு பாடல் படப்பிடிப்பிற்கான ஆடை அலங்காரம், போடப்பட்ட செட் ஆகியவற்றின் செலவுகளுக்கு மட்டுமே பிரமிக்கவைக்கும் அளவு பெரும்தொகை செலவாகியுள்ளதாம்.
இது இவ்வாறிருக்க, விஜய்யின் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய பி.டி.செல்வக்குமார்தான் இந்தப்படத்தை தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், சாதாரண ஒரு PROவாக இருந்த செல்வக்குமாரினால் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எவ்வாறு இந்தப் படத்தை தயாரிக்க முடியும் என ஒரு சாரார் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கத்தியின் வெற்றியினால் துணிந்த இளையதளபதி தன் சொந்தச் செலவிலேயே இந்தப்படத்தை எடுப்பதாகவும், அதனை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருக்க பி.டி.செல்வக்குமார் பயன்படுத்தப்பட்டிருக்கிறார் எனவும் ஒரு கிசுகிசு கோடம்பாக்கத்தில் பரவுகிறதாம்.
இந்தப்படத்திலும் சிக்கலில் சிக்குவாரா......?
இல்லை.. தப்புவாரா தளபதி...? ஏக்கத்தில் ரசிகர்கள்..
*கணேசமூர்த்தி ராகவன்.