தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான விசேட குழு ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு நியமிக்கவுள்ளது
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில் இதன்போது இந்த குழு நியமிக்கப்படும் என்று கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்த குழுவுக்காக கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளால் இவ்விரண்டு பிரதிநிதிகளை பரிந்துரைக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த குழுவே அரசியல் தீர்வு சார்ந்த விடயங்களுக்காக அரசாங்கம் உள்ளிட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் என்றும் கூறப்படுகிறது