மிரட்டும் அனுஷ்கா- கலக்கத்தில் நடிகர்கள்.'சூப்பர்ஸ்டார்' ரஜினி மற்றும் 'தல' அஜித் ஆகியோரின் படங்களில் ஒரே நேரத்தில் நாயகியாக நடித்திருக்கும் தமிழின் முன்னணி நாயகி அனுஷ்கா இயக்குனர் குணசேகரின் இயக்கத்தில் நடிக்கும் படம் தான் "ராணி ருத்ரம்மாதேவி".
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையான அனுஷ்கா, முன்னரே கதையின் நாயகியாக நடித்த படம் "அருந்ததீ". தெலுங்கில் சக்கைப்போடு போட்டது மட்டுமல்லாமல் தமிழிலும் அனுஷ்காவுக்கு நல்லதொரு புகழைப் பெற்றுக் கொடுத்திருந்தது இந்த "அருந்ததீ" திரைப்படம்.
இவ்வாறான நிலையில் மீண்டும் கதையின் நாயகியாக, ராணி ருத்ரம்மாதேவி வேடம் தாங்கியிருக்கிறார் அனுஷ்கா. வேடம் தாங்கினார் என்பதைவிட ராணி ருத்ரம்மாதேவியாகவே மாறினார் எனச் சொல்கிறார்கள் இயக்குனர் உட்பட்ட படக்குழுவினர். நடிகை ஒருவர், ஒரு படத்தில் நடிப்பதற்கு 40நாட்கள் திகதி கொடுப்பதே பெரியவிடயம் எனச் சொல்லும் சினிமாத்தரப்பு அனுஷ்காவைப் பார்த்து வியந்துபோய் உள்ளார்களாம். ஏனெனில் இந்தப் படத்திற்காக 150நாட்கள் நடித்துக் கொடுத்திருக்கிறாராம் இயக்குனரின் நடிகை அனுஷ்கா.
ராணி ருத்ரம்மாதேவி கதை என்பதால் நிறைய சண்டைக்காட்சிகள் நிறைந்த இந்தப்படத்தில் குதிரையேற்றம், வாள் பயிற்சி உட்பட பல காட்சிகளில் பயிற்சி பெற்று தானே நடித்தும் கொடுத்திருக்கிறாராம் அனுஷ்கா. அதேவேளை சண்டைக்காட்சிகளுக்காக மட்டுமே 60நாட்கள் நடித்துள்ளதோடு, 150அடி உயரத்தில் தொங்குவது போன்றதொரு காட்சியில் 'டூப்' போடாமல் தானே அந்தரத்தில் தொங்கி அபாயகரமான அந்தக்காட்சியில் நடித்திருக்கிறார் எனவும் படக்குழுவினர் சொல்லிச் சொல்லி வியக்கின்றார்களாம்.
நிறைய நடிகர்களே அபாயகரமான காட்சிகளில் 'டூப்' போட்டு வேறொருவரை நடிக்கவைக்கும்போது, ஒரு பெண்ணான நடிகை அனுஷ்கா சண்டைக்காட்சிகளில் நடித்த 60 நாட்களில் ஒருநாள் கூட 'டூப்' போட்டு வேறொருவரை நடிக்கவைக்கவில்லையாம் அனுஷ்கா. இல்லை...இல்லை....ராணி ருத்ரம்மாதேவி.
"அருந்ததீ" யை மிரட்டுவாரா....? இல்லை பணிந்து போய்விடுவாரா ராணி ருத்ரம்மாதேவி..? எதிர்பார்ப்பில் திரையுலகம்.
*கணேசமூர்த்தி ராகவன்.