விஜய் கெமராவுக்கு முன்னால் ஒரு மாதிரியும், கெமராவுக்கு பின்னால் ஒரு மாதிரியும் இருப்பார் என கூறுகிறார்
சமந்தா.
ஹைதரபாத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியொன்றில், தமிழில் வெற்றி நாயகியாக வலம் வந்துக்கொண்டிருக்கும் நடிகை சமந்தா, தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு, போன்றோர் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சி மேடையில் மகேஷ் பாபு சமந்தாவிடம் ' விஜயுடன் நடித்த அனுபவம் பற்றி கூறுங்களேன் என்று கேட்க ....
சமந்தா கூறிய பதில் தான் 'விஜய் ஒரு விசித்திரப் பிறவி, அவரா இவர் என்று தோன்றும்' என்பது.
விஜய் கெமராவுக்கு முன்னால் ஒரு மாதிரியும், கெமராவுக்கு பின்னால் ஒரு மாதிரியும் இருப்பார், 2 மணிநேரங்களுக்கு மேல் யாரோடும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருப்பார். கெமரா முன்னால் வந்ததும், நகைச்சுவை, அடிதடி என பின்னியெடுப்பார். அப்போது அவரா இவர் என்று தொன்றும் என்றார் சமந்தா. மேலும் அவர் கூறுகையில், ஸ்பிலிட் பெர்சனாலிடியோ என்று கூட யோசித்திருக்கிறேன் என்றார். எத்தனையோ முறை வியந்து பார்த்துள்ளேன் என்கிறார் சமந்தா.
- ர.பிரவீனா