"என்னை அறிந்தால்" பெறுபேறு பற்றி அஜித் - அதிர்ச்சியில் கெளதம்மேனன்.'தல' அஜித் இன் நடிப்பில், அண்மையில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் தான் "என்னை அறிந்தால்". தமிழில் வெளியாகி Box Office ஹிட் ஆன பல படங்களின் சாதனைகளை முறியடித்து, இன்னும் திரையரங்குகளில் கூட்டத்திற்கு குறைவில்லாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த "என்னை அறிந்தால்".
'தல'அஜித் ற்கு மேலும் புகழ் சேர்த்தது மட்டுமல்லாமல், திரைவானில் அவ்வளவாக ஜொலிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த நடிகர் அருண் விஜய்க்கும் தமிழ்சினிமாவில் ஒரு திருப்புமுனையைக் கொடுக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற படம் இது. அது மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராக கெளதம்மேனன் மீண்டும் தலைதூக்க வைத்ததும் இந்தப்படம் என்றால் மிகையில்லை.
"யோகன் அத்தியாயம் ஒன்று" என ஒரு படம், அதேபோல "துருவ நட்சத்திரம்" மற்றுமொரு படம் என பல படங்கள் இயக்குனர் கெளதம்மேனன் இயக்கத்தில் வெளிவரவிருந்த நிலையில், அவை எல்லாம் இடைநடுவில் கைவிடப்பட்டன. அத்துடன் சில படங்களின் தொடர் தோல்வி என்பன காரணமாக மனதளவில் நொந்துபோயிருந்ததுடன், திரையுலகில் எதிர்மறையான விமர்சனங்களுக்கும், பொருளாதார நெருக்கடிக்கும் கூட உள்ளாகியிருந்தார் கெளதம். இந்தநிலையில், கெளதம்மேனனின் நிலையறிந்த 'தல'அஜித் தானே முன்வந்து நடிப்பிற்கான திகதிகள் ஒதுக்கிக் கொடுத்ததால் உருவான படம் தான் இந்த "என்னை அறிந்தால்".

இது இவ்வாறிருக்க, படம் பல தடைகளைதாண்டி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இவ்வாறு "என்னை அறிந்தால்" வெளியான முதல்நாளில் சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்திருக்கிறார் கெளதம். அப்போது அஜித்திடமிருந்து கெளதமிற்கு தொலைபேசி அழைப்பு கிடைத்திருக்கின்றது. அந்தவேளையில் படத்தின் பெறுபேறு பற்றி இயக்குனர் என்ற முறையில் ‘தல’அஜித்திடம் கருத்துக் கேட்டிருக்கிறார் கெளதம். ஆனால் அஜித்தோ படத்தை பற்றி கணக்கில் எடுக்காமல் 'படம் ஒருபுறம் இருக்கட்டும்..... அதை விடுங்கள்...உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து விட்டதா....? இப்பொழுது மன சந்தோசத்துடனும்,நிம்மதியுடனும் உள்ளீர்களா...?' என்று மட்டும் தான் முதலில் கேட்டாராம்.
அத்துடன், கெளதமுடன் தொடர்ந்து உரையாடிய அஜித் 'படத்தின் வெற்றி தோல்வி பற்றி எல்லாம் ஜோசிக்காமல்,கவலைப்படாமல் குடும்பத்தினருடன் சேர்ந்து சந்தோசமாக இருங்கள் போதும்' என்று சொல்லிவிட்டு அழைப்பினை துண்டித்துவிட்டாராம். அதனை சற்றும் எதிர்பார்க்காத கெளதம்மேனன் அதிர்ச்சியில் வையடைத்துப் போய்விட்டாராம். அத்துடன் அஜித்தின் இந்த பெருந்தன்மையையும், அணுகுமுறையையும் கொஞ்சமும் எதிர்பாராத கெளதம், இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா...? அதுவும் சுயநலமாக மட்டுமே சிந்திக்கும் திரையுலகில் இப்படி ஒருவர் இருக்க முடியுமா என அதிசயிக்கிறாராம்.
இவ்வாறு இன்ப அதிர்ச்சியில் இருக்கும் கெளதம்மேனன், இந்த விஷயம் பற்றி தனக்கு நெருக்கமானவர்களிடமும் சிலாகித்து வருகிறாராம். இதை ஒருவாறு தெரிந்து கொண்ட கோடம்பாக்கம் சினிமா வட்டாரமும் வியப்பில் விழி விரிப்பதாகத் தகவல்.
எது எப்படியோ, Late ஆக இருந்தாலும் Latest ஆக இருக்கிறதே தகவல் என்ற மிதப்பில் 'தல' ரசிகர்கள்.
*கணேசமூர்த்தி ராகவன்.
2015.02.20