5,018 Views
==CASTRO RAHUL ==
வடிவேலு, இயக்குனர் யுவராஜ் தயாளன் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் – “எலி”.முழுக்க முழுக்க நகைச்சுவைக் காட்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்படும் படம் இது.
1960களின் பிண்ணனியில் உருவாகும் இப்படத்தை சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி சதிஷ் குமார் தயாரிக்கிறார்.கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படபிடிப்பு இரவுபகலாக இடைவிடாமல் நடைபெற்று வருகிறது.
பின்னி மில் வளாகத்தில் அமைக்க பெற்ற நட்சத்திர வீடு, பழமையான வீடுகள், பிரமாண்டமான வீடுகளின் உள்கட்டமைப்புகள்,வில்லனின் ரகசிய இருப்பிடம் என 15க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட அரங்குகள் கலை இயக்குனர் தோட்டாதரணியால் அமைக்கப்பட்டு, அங்கே வசனகாட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன.
மேலும் பாடல் காட்சிக்கான செட் அமைக்கப்பட்டு அதில் 15 நாட்களுக்கு மேலாக, மும்பை நடனக்கலைஞர்கள் ஆட, பழம்பெரும் நடன இயக்குனர் தாராவின் நடன அமைப்பில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
எலி படத்தின் கதையையும், தனது புதுவிதமான கதாபாத்திரத்தையும் கேட்டு கதாநாயகியாக நடிக்க சம்மதித்தாராம் நடிகை சதா. (அய்யோ பாவம்)
கவர்ச்சியில் மட்டுமல்ல காமெடியிலும் கலக்கி இருக்கிறாராம் சதா.
சதாவின் நகைச்சுவை காட்சிகள் புது அனுபவம் தரும் என்கிறார் இயக்குநர்.தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வரும் எலி படத்தின் அனைத்து பணிகளும் ஏப்ரல் இறுதியில் நிறைவு பெற்று மே மாதம் எலி திரைக்கு வருகிறது.
குழந்தைகள், பெண்கள் என அனைவரும் பார்க்கும் வண்ணம் நகைச்சுவைக்கு மட்டும் முதலிடம் தந்து எடுக்கப்படும் இந்தப்படத்தில் சிறப்பம்சம் ஒன்றும் உண்டாம்.
என்னா அது?
பூனைகள் துரத்தும்போது எலி எப்படி சமாளிக்குமோ, அதே போன்று சண்டைக் காட்சியில் நகைச்சுவையால் அசத்தியிருக்கிறாராம் வடிவேலு.
படம் வரட்டும் பார்ப்போம்…