தமிழில் உள்ள முன்னணி ஹீரோக்களோடு ஜோடி போட்டவர்கள் தான், நடிகைகளான அனுஷ்கா மற்றும் தமன்னா. அஜித் விஜய் சூர்யா என, அத்தனை ஹீரோக்களோடும் ஒரு வலம் வந்தவர்கள் இருவரும்!
இந்நிலையில், அனுஷ்கா இன்னும் முன்னணியில் உள்ளார். தமன்னாவுக்கு பெரிதாக வாய்ப்புக்கள் இல்லை எனலாம். ஆர்யாவுடன் ஒரு படத்தில் நடித்து வருவதோடு, தமிழ் தெலுங்கில் உருவாகும் கார்த்தியின் படத்திலும் நடித்து வருகிறார்.
ஆக, இப்பொழுது அனுஷ்கா பற்றி கருத்துச் சொல்லியுள்ளார் தமன்னா. அழகும் அற்புத நடிப்பாற்றலும் கொண்டவர் அனுஷ்கா. அவருக்கென்று இருக்கும் திறமைகளுக்கு எப்பொழுதும் அவரே சொந்தக்காரர். எப்போதும், அனுஷ்காவை எனக்குப் போட்டியாக நான் நினைத்ததில்லை. அவரது இடத்துக்கு நான் இன்னும் வரவில்லை என, திறந்த மனதாக உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார் தமன்னா அம்மணி.
-கோடம்பாக்கக் குருவி-