பெல்ஜியம் நாட்டில் அறுசுவை விருந்தொன்று வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்பட்டுள்ளது.
இதிலென்ன விசேஷம்னு நீங்க நினைக்கலாம்.இந்த விருந்து பரிமாறப்பட்ட இடம் தான் விஷேஷம்.
'குடை ராட்டினம்' போன்ற வட்ட வடிவான சாப்பிடும் அறை தயாரிக்கப்பட்டு அந்நகரிலுள்ள உயர்ந்த கட்டிடத்தின் மேலிருந்து க்ரேன்களின் உதவியால் நடுவானில் நிலை நிறுத்தப்பட்டது.
பிரபல சமையற் கலை நிபுணர் ஒருவர் இங்கிருந்து விதம்விதமான உணவுகளை சமைத்து சுடச்சுட பரிமாற வாடிக்கையாளர்களும் தாம் இருப்பது பூலோகமா மேலோகமா என்று தெரியாமலே அந்நகரின் முழு அழகையும் ரசித்தபடி உணவருந்தியுள்ளனர். இங்கிருந்த அனைவரும் இழுத்து கட்டப்பட்ட பாதுகாப்பு பட்டிகளுடன் அமர்ந்திருந்தமை குறிப்படதக்க ஒரு விடயம்.