உலகக்கிண்ணப் போட்டிகளின்போதே இரட்டை சத்தங்கள் குவிக்கப்பட்டபோது ஒருநாள் போட்டிகளில் 300 ஓட்டங்கள் பெறப்படும் என்று ஆரூடம் கூறப்பட்டது.
நேற்று இங்கிலாந்தின் கழக மட்டப் போட்டியொன்றில்
லயம் லிவிங்க்ஸ்டன் Liam Livingstone என்ற இளம் வீரர்
350 ஓட்டங்களை விளாசித் தள்ளியிருக்கிறார்.
27 சிக்சர்கள், 34 நான்கு ஓட்டங்களுடன் வெறும் 138 பந்துகளில் இந்த 350 ஓட்டங்களைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ள இங்கிலாந்தின் இளைய வீரர் தனது அணி மிகப் பெரிய ஓட்ட எண்ணிக்கையையும் பதிவு செய்து, 500 ஓட்டங்களால் சாதனை வெற்றியைப் பெறவும் உதவியுள்ளார்.
லிவிங்க்ச்டனின் ஓட்டங்களில் 298 ஓட்டங்கள் பவுண்டரிகளிலேயே பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தின் கழக மட்டப் போட்டியில் Nantwitch Town என்ற அணிக்காக ஆடியபோதே நேற்று இந்த உலக சாதனை புரியப்பட்டுள்ளது.
Nantwitch Town அணி 579 ஓட்டங்களை 45 ஓவர்களில் இதன்போது பெற்றது.
பந்து வீசி கொடையாளிகளாக ஓட்டங்களை அள்ளி வழங்கிய Caldy (கல்டி) அணி துடுப்பாட்டத்தில் 100 ஓட்டங்களைக் கூடத் தாண்டாதது தான் பரிதாபம்.
79 ஓட்டங்களுக்கு சுருண்டு போனது கல்டி.
லிவிங்க்ஸ்டன் உடைத்த கழக மட்ட சாதனைக்கு முன்னர் சொந்தக்காரராக ஒரு இந்திய வீரர் இருந்திருக்கிறார்.
ஆந்திர மாநிலத்தின் வீரரான நிகிலேஷ் சுந்தரேசன் என்ற வீரர் 2008ஆம் ஆண்டு ஆட்டமிழக்காமல் 334 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இதுவரை எந்தவொரு முதல் தரப் போட்டிகளிலும் விளையாடாத லிவிங்க்ஸ்டன் இந்த 350க்குப் பிறகு லங்காஷயர் பிராந்திய அணிக்கு வாய்ப்பைப் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியே போனால் வெகுவிரைவில் ரோஹித் ஷர்மா ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெற்ற 264 ஓட்டங்களை உடைத்து முச்சதம் ஒன்று பெறப்படும் போல தெரிகிறதே..
யார் பெறுவார் முதலில்?
ஏஆர்வி