23,913 Views
அதன் பிறகு இருவரும் இணையமுடியாத அளவுக்கு இருவரையும் பிரித்தது – ஈகோ.
இனி சேர்ந்து நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.
கமல், ரஜினி இருவரும் சேர்ந்து நடித்த கடைசிப்படம் அலாவுதீனும் அற்புதவிளக்கும்.
ஐ.வி.சசி இயக்கிய மலையாளப்படமான இது 1979 ஆம் ஆண்டு வெளியானது. தமிழிலும் இப்படம் டப் செய்யப்பட்டு நேரடி தமிழ்ப்படம் போல் வெளியிடப்பட்டது.
அதன் பிறகு கமல், ரஜினி இருவரையும் இணைந்து நடிக்க வைக்க பல பேர் முயன்றும் முடியவில்லை. கே.பாலசந்தரே இந்த முயற்சியை மேற்கொண்டார்.
ஏறக்குறைய 35 வருடங்களுக்குப் பிறகு கமலையும் ரஜினியையும் இணைந்து நடிக்க வைக்கும் அரிய முயற்சியை மேற்கொண்டார் இயக்குநர் ஷங்கர்.
லைகா மொபைல் தயாரிப்பில் ரஜினி ஹீரோவாக நடிக்கும் எந்திரன் – 2 படத்தில் கமலை வில்லனாக நடிக்க வைத்தால் என்ன? என்று நினைத்த ஷங்கர், விஷயத்தைச் சொல்லாமலே
கமலை சந்திக்கப் போயிருக்கிறார்.
நேரில் கமலை சந்தித்த ஷங்கர் தயங்கித் தயங்கி மெல்ல இந்த விஷயத்தை சொல்லி இருக்கிறார்.
அதுவரை உற்சாகமாக பேசிக்கொண்டிருந்த கமலுக்கு சட்டென முகம் மாறிவிட்டதாம்.
”ரஜினியும் நானும் 35 வருஷமா போட்டியாளர்களா இருக்கோம்… அது தெரிஞ்சும் ரஜினி ஹீரோவாக நடிக்கும் படத்தில் என்னை வில்லனாக நடிக்க வைக்க உங்களுக்கு எப்படி தோணிச்சு ஷங்கர்?”
என்று திரும்பத் திரும்ப ஷங்கரிடம் கேட்டு அவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி இருக்கிறார் கமல்.
இந்த ஆள்கிட்ட ஏன்டா கேட்டோம் என்று ஷங்கர் தன்னைத்தானே நொந்து கொண்டு கிளம்ப, புறப்படும்போது கமல் சொன்னதுதான் ஹைலைட்…!
யோசித்து சொல்றேன் என்று சொல்லி இருக்கிறார் கமல்.
ரஜினிக்குக் கொடுக்கும் சம்பளத்தைவிட ஒரு கோடி உங்களுக்குக் கூடுதலாக தருகிறேன் என்று ஷங்கர் சொல்லி இருந்தால் கமல் சந்தோஷமாக சம்மதித்து இருப்பார்.
ஷங்கர் அதைச் சொல்லவில்லை. எனவே ரஜினிக்கு வில்லனாக நடிக்க கமல் மறுக்க, தற்போதைய தகவலின்படி விக்ரம் நடிக்கிறாராம்.
ரஜினிக்கு வில்லன் விக்ரமா? காமெடிப்படமா இருக்கும் போலருக்கே…!
=== CASTRO RAHUL ===