5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் அழிவடைந்த மமத் எனப்படும் நீண்ட ரோமங்களைக் கொண்ட பிரமாண்டமான யானைகளை மீள உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவில் இந்த ஆய்வு நடைபெறுகிறது.
பனியுகக் காலப்பகுதியில் வாழ்ந்த மமத் யானைகள், முற்றாக அழிந்து போயின.
அவற்றின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வைத்து மமத் யானைகளின் முழுமையான மரபணுக்களை உருவாக்கியுள்ளனர்.
இந்த யானைகளுடன் தற்போது வாழும் யானைகளின் பொருத்தப்பாட்டை பயன்படுத்தி, அவற்றின் மரபணுக்களை பயன்படுத்தி மீண்டும் உருவாக்க முயற்சிக்கப்படுகிறது.