மாணவர்கள் இருந்தும், ஆசிரியர்கள் இருந்தும் பாடசாலைகள் மூடப்படும் நாட்டில் இருக்கும் நாம் இந்த அதிசயம் எங்கே நடக்கிறது என்று ஆச்சரியப்படுவோம்.
இது இங்கல்ல, இத்தாலியில்.
இத்தாலியில் ஒரே ஒரு மாணவிக்காக இயங்கி வரும் இந்த பாடசாலை உலகிலேயே மிகச் சிறிய பாடசாலை என்ற பெயரை பெற்றுள்ளது. தரம் மூன்றில் படிக்கும் எட்டு வயது மாணவியை மையமாகக் கொண்டு இயங்கும் இப்பாடசாலையில் 33 வயதான ஆசிரியை ஒருவர் கற்பித்து வருகிறார்.
கடந்த ஆண்டு நான்கு மாணவர்கள் தரம் 5ல் கல்வி கற்று வெளியேறியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஆரம்ப பிரிவில் இணைவதற்கும் மாணவர்கள் தயாராக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இப்போதைக்கு இவர் மட்டுமே இங்கே கற்கிறார்.
தனது கல்வி தொடர்பில் அங்கே கல்வி பயிலும் மாணவியிடம் பேசியபோது .......
இங்கே தனிமையை உணர கூடியதாக உள்ளது எனவும், அருகில் மற்றவர்கள் இருப்பதாக நினைத்துக்கொண்டு தான் பாடம் படிப்பதாகவும் கூறியுள்ளார்.
தனக்கு முன்னே பல மாணவர்கள் இருப்பதாக நினைத்துக்கொண்டு தானாம் அந்த ஆசிரியையும் கற்பிக்கின்றார்.
( அடகடவுளே எங்களுக்கும் இப்படி தனித்தனிய ஸ்கூல் இருந்திருந்தா ஒவ்வொரு எக்ஸாம்லயும் முதலாம் பிள்ளையா வந்திருப்பமேடா.........).