அமெரிக்காவினால் வருடாந்தம் நடத்தப்படுகின்ற க்ரீன்காட் லோட்டரி சீட்டிழுப்பை பயன்படுத்தி, மோசடிகள் இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகத்தின் சிரேஷ்ட்ட தொடர்பாடல் அதிகரி செலி ஸ்ரேன் இதனை எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.
இந்த சீட்டிழுப்பில் வெற்றி பெற்றதாக கூறி, சிலர் போலியான முறையில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டும், மின்னஞ்சல்களை அனுப்பியும் நிதி மோசடியில் ஈடுபடுகின்றனர்.
எனினும் இந்த சீட்டிழுப்பில் வெற்றிப்பெற்றுள்ளமை குறித்து
www.dvlottery.state.govஎன்ற அமெரிக்காவின் க்ரீன்காட் சீட்டிழுப்புக்கான உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் மாத்திரமே தெரிந்துக் கொள்ள முடியும்.
இந்த இணைத்தளத்தை தவிர மாற்று வழிகள் எவையும் இல்லை.
எனவே இதனை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் மிகுந்த அவதானமாக இருக்குமாறு அவர் எச்சரித்துள்ளார்.