5,350 Views
இந்த வரலாறெல்லாம் தெரிந்தே வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார் மன்சூரலிகான். சென்னையில் நடந்த ஒரு பட விழாவில் அங்கு வந்திருந்த பத்திரிகையாளர்களை தாறுமாறாக பேசிய மன்சூரலிகானை, நாகரீகம் கருதி விட்டுவிட்டார்கள் அங்கிருந்த பத்திரிகையாளர்கள்.
அதற்கப்புறம் மறுநாள் சென்னையில் நடந்த ஒரு கங்காரு படத்தின் பத்திரிகையாளர் விழாக்கு வந்திருந்தார் மன்சூரலிகான். இதை கவனித்த பத்திரிகையாளர்கள், இந்த விழா எங்களுக்கானது என்பதால்தான் நாங்கள் வந்தோம். எங்களை கேவலமாக பேசிய மன்சூரலிகானும் இங்கு எங்களோடு அமர்ந்து படம் பார்ப்பார் என்றால், நாங்கள் வெளியேறுகிறோம் என்றார்கள்.
உடனே எழுந்த மன்சூர், நானே ஒரு பத்திரிகை காரர்தான். அது தெரியுமா உங்களுக்கு என்றார். அதற்கப்புறம் நான் தரக்குறைவாக யாரையும் பேசவில்லை என்றார். அதற்குள், முதல் நாள் அவர் பேசியதை கேட்டு காது வெந்துபோன பத்திரிகையாளர்கள், பேசலைன்னு பொய் சொல்லாதீங்க. கிளம்புங்க என்றார்கள்.
அதற்கப்புறம் அங்கிருந்து முணுமுணுத்தபடியே கிளம்பினார் மன்சூர். விழா சிறப்பாக நடந்தது.
=== CASTRO RAHUL ===