ஜே.வி.பியிலிருந்து விலகிய அதன் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க தாம் கட்சியினுள் முன்னெடுத்த கிளர்ச்சி தொடர்பாக நேற்று ஊடக அறிக்கை மூலம் கருத்து தெரிவித்திருந்தார்.
கட்சியினுள் தற்போதுள்ள பிரச்சினை தொடர்பாக புரிந்து செயற்படுமாறு அவர் ஜே.வி.பி உறுப்பினர்களிடமும், பொதுமக்களிடமும் இதன் மூலம் கோரியுள்ளார்.
ஜே.வி.பியின் மத்திய செயற்குழுவுக்கு தம்மால் முன்வைக்கப்பட்ட சில யோசனைகளையும் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க ஊடக அறிக்கை ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான சூழ்ச்சி தொடர்பில் கலந்துரையாடலுக்கு ற்றி மத்திய செயற்குழு கொண்டிருந்த நிலைப்பாடு பிழையானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று இரவு முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சி வெற்றிபெற்றிருக்குமாயின் ஜே.வி.பிக்கே பாரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும் எனவும் ஜே.வி.பியிலிருந்து விலகிய அதன் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.