சிலாபம் - இரணவில் - முவபிடிய பிரதேசத்தின் வனப்பகுதியில் இருந்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 10 வயது சிறுவனின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் குறித்த சிறுவன் காணாமல் போயுள்ளதாக காவற்துறைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்ததாக காவற்துறை தெரிவித்தது.
அதன்படி , இன்று காலை குறித்த சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை மேலும் தெரிவித்தது.