ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தின் கெம்ரோவோ நகரத்தில் உள்ள அங்காடி நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் சம்பவத்தை அடுத்து 16 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்காடி ஒன்றின் மேல் மாடியின் சினிமா கொட்டகை ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் 41 பேர் வரையானவர்கள் சிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்லப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.
மொஸ்கோவில் இருந்து 3 ஆயிரத்து 600 கிலோமீற்றர் தூரத்தில் ஏற்பட்ட இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.