மியன்மாரின் புதிய அதிபர் ''Win Myint '' 8,500 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளமை கைதிகளின் உறவினர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.
''Aung San Suu Kyi ''-யின் நெருங்கிய உதவியாளரான முன்னாள் அதிபர் ''Htin Kyaw '', தனது 71 வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக தனது பதவியியை அண்மையில் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, கடந்த மாதம் மியான்மரின் புதிய அதிபராக 66 வயதுடைய ''Win Myint '' பொறுப்பேற்றர்.
அதிபராக பொறுப்பேற்று ஒரு மாத காலத்திற்குள் ''Win Myint '', நாட்டின் சிறையில் உள்ள 8,500 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக மியன்மாரில் ''தின்கியான்'' என்று அழைக்கப்படும் பௌத்த புத்தாண்டு திருவிழா நிகழ்வில் பங்குபற்றியபோது அறிவித்துள்ளார்.
இவரது இந்த அறிவிப்பு கைதிகளின் உறவினர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.