ஆச்சரியப்பட்டுப்போவீர்கள்...
கடந்த 25 ஆண்டுகளில் அமெரிக்க மக்களின் மனம் கவர்ந்த அதிபர் பில் கிளிண்டன் தான் என்பது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் பிரபல நிறுவனம் ஒன்று கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.
முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கு 42 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பில் தற்போதைய அதிபர் பராக் ஒபாமாவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. அவருக்கு 18 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில் ஜார்ஜ் புஷ் உள்ளார். அவருக்கு 17 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர். அவரது தந்தை ஜார்ஜ் புஷ் 16 சதவீதம் பேரின் ஆதரவுடன் நான்காவது இடத்தில் உள்ளா
இது மாத்திரமல்லாமல் 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலில் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களிப்போம் என்று 55 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
பாருங்கப்பா..
மனுஷன் 'பலான' விஷயத்தில் கில்லாடியா இருந்தும் கூட பலத்த மக்கள் ஆதரவு இருக்காம்.
கில்லாடி கிளிண்டன் தான்.