Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

சிம்புவின் சில படங்களுக்கு ஏதாவது சிக்கல்கள் வந்து சின்னாபின்னமாகி, பிறகு அதிலிருந்து மீண்டெழுந்து வருவதற்கிடையில், போதுமென்றாகி விடும். இப்பொழுதும் அதே நிலையே அவரது வாழு படத்துக்கும் !
படம் அந்தா இந்தாவென்று இன்னும் வெளியிடப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.

இந்நிலையில், தனது அடுத்தடுத்த படங்களை கவனிக்க ஆரம்பித்து விட்டார் சிம்பு. கௌதம் மேனன் இயக்கம் அச்சம் என்பது மடமையடா மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் இன்னுமொரு படத்திலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் இந்த விரல் நடிகர்.

சரி, படத்தில தானே நடிக்கப் போறாரு.. அதில என்னைய்யா உனக்குன்னு நீங்க பார்க்கிறது புரியுது. விசயமே இனித்தான்பா. அதாவது இந்த செல்வராகவன் இயக்கம் படத்தில் சிம்புவுக்கு ஜோடிக்காக நடிக்க நம்ம நடிகைகளிடையில் கடும் போட்டியும் பனிப்போரும் நிலவி வருகிறது.

த்ரிஷா, டாப்ஷி, எமி ஜாக்சன், இந்தி நடிகை ஹீமா குரோஷி போன்றவர்கள் பரிசீலிக்கபடும் பெயர்கள். இதில் யாரை செல்வராகவன் தேர்வு செய்யப்போகிறார் என்பதை சிம்பு தொடக்கம் இந்த அத்தனை நட்சத்திரங்களுடைய இரசிகர்களும் எதிர்பார்த்துள்ளார்கள்.

யாருக்கு அடுத்து சிம்புவோடு இணைந்து கிசுகிசுக்கப்படப் போகும் வாய்ப்போ? சாரி, இணைந்து நடிக்கப்போகும் வாய்ப்போ?

-கோடம்பாக்கக் குருவி-
383 Views
அரசவையில் விகடகவி என்று ஒருவர் இருப்பார். புத்திசாலித்தனமான ஜோக்குகள் சொல்லி அவையை ரிலாக்ஸ் செய்வதுதான் இவரது பணி.

ஒட்டு மொத்த தமிழகம் அல்லது உலகத் தமிழ் சினிமா ரசிகர்களின்  விகடகவியாக இப்போது செயல்படுகிறவர், பவர் ஸ்டார் என அறியப்படும் நடிகர் சீனிவாசன். புத்திசாலித்தனம் கொஞ்சம் குறைவு என்றாலும் சிரிப்புக்கு குறைவில்லை.
 
விழா மேடைகளில் கருத்துரை சொல்லி வந்த பவர் ஸ்டார் இப்போது ட்விட்டரிலும் புகுந்திருக்கிறார். அவரது சமீபத்திய டார்கெட் சிம்பு.
 
”தம்பி சிம்பு, வாலுனு பெயர் வச்சதுனாலதான் படம் ரிலீஸ் ஆகலை போல. பேசாம தலன்னு பெயரை சேஞ்ச் பண்ணிடுங்களேன்” என்று கலாய்த்திருக்கிறார்.
 
பவர் ஸ்டார் கலாய்க்கிற அளவுக்கு சிம்புவின் நிலைமை ஆகியிருக்கிறது.

ஒரு படத்தை ஒப்புக் கொண்டு மூன்று படங்களை கமிட் செய்யும் சிம்புவின் கதகளி போக்கு தொடர்ந்தால் பவர் ஸ்டார் மட்டுமில்லை, தமிழ்நாட்டின் நண்டும் குஞ்சும் அவரை கலாய்க்கும்.  :P

======CASTRO RAHUL====
283 Views

 விரைவில் வெளியாகவுள்ள அனுஷ்காவின் ருத்ரமா தேவி படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படத்தை எடுத்துள்ளனர்.

அனுஷ்கா ருத்ரமா ராணி வேடத்தில் நடித்துள்ளார். ராணா, அல்லு அர்ஜுன், பிரகாஷ்ராஜ், சுமன், நித்யாமேனன், கத்ரினா திரேசா போன்றோரும் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். குணசேகர் இயக்கி உள்ளார்.

13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ருத்ரமாதேவி ராணியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர். இதற்காக அனுஷ்கா வாள் சண்டை, குதிரை சவாரி பயிற்சிகள் பெற்று இப்படத்தில் நடிக்கிறார்.

 

இதன் பாடல் வெளியீட்டு விழாவை இரண்டு இடங்களில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதில் பங்கேற்கும்படி நடிகர், நடிகைகள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

சரித்திர கதை என்பதால் இப்படத்துக்கு அரசின் கேளிக்கை வரி விலக்கு பெற படக்குழுவினர் முயற்சிக்கின்றனர். படத்தின் இயக்குனர் குணசேகர் தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர்ராவை நேரில் சந்தித்து பாடல் வெளியீட்டு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அப்போது கேளிக்கை வரி விலக்கு பெறுவது பற்றியும் பேசியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் படத்தின் ட்ரெய்லரை காட்டினார். அதை பார்த்ததும் சந்திரசேகரராவ், கோபமடைந்தாராம். அதில் தெலுங்கானா மாநிலம் உதயமானதற்கு எதிரான வசனங்கள் இடம் பற்று இருந்ததாக கூறப்படுகிறது.

இதுவே சந்திரசேகரராவை ஆத்திரப்பட வைத்ததாம். அதனை நேரிலேயே டைரக்டர் குணசேகரிடம் தெரிவித்துவிட்டார். இதனால் ருத்ரமா தேவி படத்துக்கு சிக்கல் எற்பட்டு உள்ளது. வரி விலக்கும் கிடைக்காது என்கின்றனர் சினிமா வட்டாரத்தினர்.

====CASTRO RAHUL====

276 Views
பாடலாசியரியர் சினேகன் நாயகனாக நடிக்கும் சரித்திர படம், ராஜராஜ சோழனின் போர்வாள். இளையராஜா இசையமைக்கும் இந்தப் படம் சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

 
போர்வாள் துருப்பிடித்துவிட்டது, இனி அவ்வளவுதான் என கோடம்பாக்கம் பரவலாக பேசிவரும் நிலையில், அதனை மறுத்துள்ளார் சினேகன்.

 
படத்தின் ஒவ்வொரு பகுதியையும் பார்த்துப் பார்த்து உருவாக்கி வருகிறேnம். சில முன்னணி நடிகர்களின் கால்ஷீட் எதிர்பார்த்தபடி கிரைடக்கவில்லை. அதனால்தான் 3 மாதங்களாக படப்பிடிப்பு நடக்கவில்லை.

வரும் ஏப்ரலில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி இந்த வருட இறுதிக்குள் படத்தை திரைக்கு கொண்டு வந்துவிடுவோம் என்று தெரிவித்தார்.
 
ஆக, போர்வாள் இன்னும் ஷார்ப்பாகதான் இருக்கு.

====CASTRO RAHUL=====
347 Views

உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்டில் 200 ஓட்டங்களைக் கடந்தார்.

மேலும் இதன் மூலம் சாதனைகளையும் நிலைநாட்டினார்.

அவர் 152 பந்துகளில் 203 ஓட்டங்களைக் கடந்ததுடன், இப்போட்டியில் ஆட்டமிழக்காமல் 163 பந்துகளில் 237  ஓட்டங்களைப் பெற்றார். இதில் '24' நான்கு ஓட்டங்களும் , '11' ஆறு ஓட்டங்களும் அடங்குகின்றது.

இதன் மூலம் உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரராக அவர் பதிவானார். அதுமட்டுமன்றி உலகக் கிண்ண போட்டியொன்றில் வீரரொருவர் பெற்ற அதிகூடிய ஓட்டம் இதுவாகும். 

இதுமட்டுமன்றி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதத்தைக் கடந்த முதல் நியூசிலாந்து வீரராக இவர் பதிவானார்.

288 Views
ஒரு படம் மூன்று காட்சிகள் ஓடினால், ஆஹா என்கிறார்கள். மூன்று நாட்கள் ஓடினால், அபாரம் என்கிறார்கள். 4 நாட்கள் ஓடினால், வெற்றிப்படம் என்கிறார்கள். இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் நிலை என கவிஞர் வைரமுத்து கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சிவாஜி கணேஷன் நடிப்பில் வந்த வீரபாண்டிய கட்ட பொம்மன் திரைப்படம், 56 வருடங்களின் பின்னர் மீண்டும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதுப்பிக்கப்படுள்ளது. அதன் டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும்போதே வைரமுத்து இன்றைய சினிமாவின் நிலை குறித்து இவ்வாறு பேசினார்.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
404 Views
பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில், விபத்துக்குள்ளாகி தற்போது ஓய்வில் இருக்கும் நடிகர் சசிகுமார், சம நேரத்திலேயே தனது அடுத்த படத்துக்கான கதையைக் கேட்டு ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜில்லா படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய நேசமணி என்பவர் இயக்குனராக மாறி இயக்கும் இப்படத்தில், குக்கூ பட நாயகி மாளவிகா நாயார் நாயகியாகிறார்.

விரைவில் தாரை தப்பட்டையை முடித்துக் கொடுத்துவிட்டு, இந்த பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் சசிகுமார்.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
315 Views
இவரெல்லாம் நடிச்சு என்ன பண்ணப் போறார் என்கின்ற பேச்சுக்களை, உடைத்து புதிய அத்தியாயத்தையே உருவாக்கிக் காட்டிய நடிகர்கள் பட்டியலில் முக்கியமானவர் நடிகர் விஜய சேதுபதி. இவரது அடர் தாடிக்கும், அசத்தும் பார்வைக்கும் மனதை பறி கொடுக்காத இரசிகர்களே இருக்க முடியாது. அவ்வளவு நெருக்கமான முகம். அதாவது நம்ம ஊர்ல உள்ள பையன் போல ஒரு தோற்றத் தெரிவு இவரிடமுள்ளது.

தனக்கு ஒத்துப் போகும் படங்களில் மட்டுமே ஒப்பந்தமாகி, பேராசையில்லாமல் பெருந் தன்மையோடு நடந்து கொள்ளும் ஒரு நல்ல நடிகர் இவர் எனலாம். இப்பொழுது நடிகர் தனுஷ் தயாரிப்பில் நானும் ரௌடிதான் படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார்.

இந்தப் படத்துக்குப் பின்னர், அருண்குமாரோடு இணைந்து இன்னொரு படத்திலும் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இப்படத்தில் போலீஸ் பாத்திரம் ஏற்கிறார் விஜய சேதுபதி.

இந்தப் படங்கள் வருவதற்கு முன்னமே, இடம் பொருள் ஏவல், ஆரஞ்சு மிட்டாய், மெல்லிசை, புறம்போக்கு ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன என்பதும் முக்கியமானது.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
476 Views

ஹிந்தியில் இரசிகர்களை கவர்ச்சியில் கலங்கடித்து வருகின்றவர் நடிகை மல்லிகா செராவத். இவருக்கும் இவரது கவர்ச்சித் திருவிழாவுக்குமென எக்கச்சக்க இரசிகர்களுண்டு. அம்மணி என்றால் இறந்தவர் கூட எழுந்து நின்று ஆடும் அளவுக்கு பரபரப்புக்கும் கிசுகிசுக்கும் புகழுக்கும் சொந்தக்காரன் இவர்.

இந்நிலையில், அண்மையில் இவரது நடிப்பில் வந்து சக்கை போடு போட்ட ''டர்ட்டி பொலிடிக்ஸ் '' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பின்வருமாறு மல்லிகா கூறியிருந்தார்.

''எனக்கு கவர்ச்சியாக நடித்து அலுத்து விட்டது. எப்போதும் கவர்ச்சியாக நடிப்பது எனக்கு பிடிக்கவில்லை. எனவே, சரித்திரம் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகளைக் கூறும் படங்களில் நடிப்பதையே விரும்புகிறேன். அத்தோடு எனக்கு இந்திய தேசியத் தலைவி இந்திரா காந்தியை ரொம்பப் பிடிக்கும். அவரது வாழ்க்கைச் சரித்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். யாராவது நடிக்க வைத்தால் எனது சம்பளத்தையும் பாதியாகக் குறைக்கிறேன்'' என்றுள்ளார் மல்லிகா செராவத்.

நீங்க யோசிக்கலாம், என்னது இந்திரா காந்தியாக மல்லிகாவான்னு? யாராவது வைச்சு எடுத்தாலும் எடுப்பாங்கப்பா. செய்யக் கூடியவனுக தான் இந்த சினிமா உலகம்.

நீ மட்டும் மாறலையே மல்லிகா

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
411 Views

நம்ம சினிமாவில் இப்பொழுது, என்னதான் வெட்டினாலும் எல்லோரும் சேர்ந்தே கடுப்பாக்கினாலும், சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல தனது பயணிப்பில் நிலையை உறுதியாய் இருப்பவர் நடிகர் தனுஷ்.

அனேகன் வந்தது. எல்லோருக்கும் பிடித்துப் போனது. பாடல்களும் ஹிட் ஆகியது. வசூலும் முதலுக்கு மோசமில்லை. சின்ன ஒய்வு கொடுத்தார். மீண்டும் தனது அடுத்த படவேலைகளை இறங்கி விட்டார்.

வேலையில்லா பட்டஹாரி இயக்குனர் வேல்ராஜ் இயக்க, அனிருத் இசையமைக்க, எமி ஜாக்சன் & சமந்தா ஆகியோர் ஜோடியாக உள்ளார்கள். படத்துக்கு பெயரிடப்படவில்லை. மிக விரைவில் பெயரும் வெளியிடப்படுமென தனுஷ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
297 Views
தந்தையின் பெயர் புகழ் மகனுக்கு உதவும் என்பார்கள். இவர் விசயத்தில் இது நடக்கவில்லை. ஆரம்பத்திலேயே சோபிக்க தவறிய ஒரு நட்சத்திரம் நடிகர் சத்தியராஜின் மகன் சிபிராஜ்.

இவர் நடிப்பில் வந்த சில படங்கள் நல்ல படங்கள் ரகத்தைச் சேர்ந்திருந்தாலும், அவை வணிக ரீதியாக இவருக்கு வியாபாரத்தை கொடுக்க தவறி விட்டன. இதனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிபிராஜ் நடித்த படம் நாய்கள் ஜாக்கிரதை. இந்தப் படம் தளர்ந்திருந்த இவரை தூக்கி நிறுத்தி நடிப்பதற்கான உத்வேகத்தையும் கொடுத்தது.

இப்பொழுது மீண்டும், ஒரு பயங்கர திகில் கதையோடு களமிறங்குகிறார். படத்துக்கு ஜாக்சன் துரை என பெயரிடப்படுள்ளது. இப்படத்தில் சத்தியராஜ் மற்றும் கருணாகரனும் முக்கியமான பாத்திரமேற்று நடிக்கிறார்கள்.

கதைப்படி, 100 வருடங்களாக பியினால் பாதிக்கப்பட்டு கிடைக்கும் ஒரு கிராமத்தைக் காப்பாற்ற ஒரு போலீஸ் அதிகாரி அந்தக் கிராமத்துக்கு வருகிறார். வந்த அவர், அங்கு சந்திக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே படமென சொல்லப்படுகிறது.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
338 Views
தமிழில் முத்திரை மற்றும் கம்பீரம் போன்ற படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடிய நடிகை ராக்கி சாவந்த், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் கோஹ்லிக்கு ஐ லவ் யூ சொல்லி சிக்கலில் சிக்கியுள்ளார்.
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழமை. இப்படியான பிரபலங்களுக்கு இப்படி சர்ச்சைகளில் சிக்கல்களில் சிக்குவது அல்வா சாப்பிடுவது போல.

அண்மையில் மும்பையில் இடம்பெற்ற அழகுசாதன நிலைய திறப்புவிழா நிகழ்வொன்றில், கலந்து கொண்டபோதே பத்திரிகையாளர்களிடம் அம்மணி இந்த ஐ லவ் யூ விஷயத்தை பொதுப்படையாக அவிழ்த்து விட்டு அம்பலமேறியுள்ளார்.

இந்நிலையில், ஹிந்தி நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் கோஹ்லி காதலிப்பதை தெரிந்து கொண்டும் இந்த ராக்கி சாவந்த், இவ்வாறு கூறியிருப்பது பலர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
3,288 Views
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை அஞ்சலிக்கு, அடுத்தடுத்து பிரச்சினைகள் சிக்கல்கள் வந்தாலும், தனது இடத்தை தக்கவைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கிறார். பொதுவாக தமிழ் மொழியையே தாய் மொழியாகக் கொண்ட இந்த அங்காடித்தெரு அம்மணியின், தமிழ் பேச்சு குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகப் பிடித்தமானது எனலாம்.

தமிழிலும் தெலுங்கிலும் சொந்தக் குரலில் பேசும் அஞ்சலிக்கு, இப்பொழுது ஒரு கன்னடப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்துள்ளது. அதிலும், கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் புனித்குமார் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப்படத்தில் சொந்தக் குரலில் பேசுவதற்கு ஆயத்தமாகி வருகிறாராம் அம்மணி. படக் குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தக் கன்னடப் படத்தில் முதன்முறையாக சொந்தக் குரலில் பேச ஆரம்பித்துள்ளார் அஞ்சலி. திறமைகள், இன்னும் பெருகட்டும் அம்மணி. வாழ்த்துக்கள்.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
272 Views
முதல் பாடலிலேயே புகழின் உச்சத்தை எட்டியவர் அனிருத், இப்போது டங்கமாரி,டண்டனக்கா பாடல்களை பாடி இளைஞர்களின் மனதையும் கொள்ளை கொண்ட ஓர் இளம் பாடகராகவும் மாறி இருக்கின்றார் இவருக்கு தெலுங்கின் மெகா பவர் ஸ்டார் ராம் சரணின் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் தெலுங்கிலும் கால் பதிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது.

இயக்குனர் ஸ்ரீனு வட்லா இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ராகுல் பிரித் சிங் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் பெயரிடப்படாத படத்திற்கு இசையமைக்க அனிருத்தை நியமித்தார் ஸ்ரீனு.
ஆனாலும், அஜித்பட வாய்ப்பு வந்ததால், இந்தப் படத்துக்காக அந்தப் படத்திலிருந்து விலகிக் கொண்டார் அனிருத்.

தமிழில் நிறைய படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருக்கும் அனிருத் தெலுங்கு படத்திற்கு இசையமைக்கும் பணியை சற்று ஒத்திவைத்திருந்தார். இதில் கோபமடைந்த ஸ்ரீனு இந்த பெயரிடப்படா படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பை தன் ஆஸ்தான இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத்திடமே ஒப்படைத்துவிட்டார். தேவிஸ்ரீ பிரசாத் என்ன பண்ணுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் !!

- எழுதியது வர்ஷி-
431 Views

இந்திய தொலைக்காட்சி அலைவரிசைகளில் விளையாட்டுப் போட்டிகளை தொகுத்து வழங்கும் நட்சத்திரப் பெண்களைப் பற்றிய ஒரு பார்வை.

 





1. சொனாலி நக்ரானி : பல்வேறு கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் இவர். அழகு ராணிப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்றுள்ள இவர் முதல் ஐ.பி.எல் தொடரை தொகுத்து வழங்கியவர்.

    

 

2. அர்சனா விஜயா

முன்னணி நிகழ்ச்சித் தொகுப்பாளினியான இவர் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். ஐ.பி. எல் போட்டிகளையும் தொகுத்து வழங்கிய பெருமை இவருக்கு உண்டு.


 

3. கரிஸ்மா கோடக்

இவர் ஒரு பிரித்தானிய இந்திய மொடல் அழகி. நடிகையாகவும் , தொகுப்பாளராகவும் பிரகாசித்து வருபவர். ஐ.பி.எல் 6 ஐ தொகுத்தும் வழங்கியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீர ர்கள் பலரையும் செவ்வி கண்டு பிரபலமானவரும் கூட.



4. சிபானி தண்டேகர்

இந்திய பாடகியான இவர், மொடல் அழகியும் கூட. ஐ.பி.எல் 4 ஆம் தொடரினை தொகுத்து வழங்கிய இவர் ,  சி.சி.எல் போட்டிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

 

 

 

5. மயாந்தி லாங்கர்

 

இந்திய தொகுப்பாளினியான இவர் தொலைக்காட்சி விளையாட்டு செய்தியாளராகவும் உள்ளார். கிரிக்கெட் , உதைபந்து என பல தொடர்களை தொகுத்து வழங்கியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் உலக க்கிண்ண போட்டிகளையும் தொகுத்து வழங்கிவருகின்றார். 2011 உல க க் கிண்ண கிரிக்கெட் தொடரையும் தொகுத்து வழங்கியிருந்தார் இவர். இந்திய அணி வீர ர் ஸ்டுவர்ட் பின்னியின் மனைவி இவர் என்பது குறிப்பிட த்தக்கது.

304 Views
[1]      «      1714   |   1715   |   1716      »      [1754]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top