325 Views
சமீபத்தில் மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தரின் பெயரில் அவரது குடும்பத்தினர் அறக்கட்டளை தொடங்கியுள்ளனர்.
இந்த அறக்கட்டளை மூலம், இனி ஆண்டு தோறும் அவர் பிறந்த நாளில் நாடக, சினிமா, தொலைக்காட்சி கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து இந்த அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும் பாலச்சந்தர் மகளுமான புஷ்பா கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த வருடம் டிசம்பர் 23ம் தேதி இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்கள் அமரரான செய்தி கேட்டு பெருவாரியாக வந்து எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கத்தினராய் இணைந்து எனது தந்தைக்கு மரியாதை செலுத்தி வேண்டிய உதவிகள் செய்த பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனது தந்தையின் தயாரிப்பு நிறுவனமான 'கவிதாலயா' விற்கு இத்தனைக்காலம் பெரும்பாலமாக இருந்து எங்களுக்கு ஆதரவு கொடுத்துவரும் உங்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி கூறவிழைகிறேன்.
எங்களது தந்தை கே. பாலசந்தர் அவர்களின் பெயரில் 'கே.பாலசந்தர் பவுண்டேஷன்' (K. Balachander Foundation) என்ற அறக்கட்டளை அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம்.
இந்த அமைப்பிற்கு கே.பியின் குடும்ப உறுப்பினர்களான ராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி, பிரசன்னா, கீதா கைலாசம், கந்தசாமி பரதன் இவர்களுடன் இயக்குனர் வசந்த் சாய் ஆகியோர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
1. கே.பி. அவர்களின் விருப்பபடி திரைப்படத் துறையைச் சேர்ந்த நலிந்த தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவி.
2. ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரிகளில் Visual Communication துறையில் பயிலும் மாணவர்களில்சிறந்தவருக்கு கே பாலசந்தர் பெயரில் "Creative Excellence" விருது வழங்குதல்.
3. ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்த தினமான ஜுலை 9ல் விழா நடத்தி நாடகம், திரைப் படம், சின்னத் திரை ஆகிய மூன்று துறைகளில் சிறந்து விளங்கும் படைப்பாளிகளுக்கு விருது வழங்குதல்.
4. கே.பி அவர்களின் படைப்புகளை Digitize செய்து பாதுகாத்து அவரைப் பற்றிய எல்லா தகவல்களையும் ஆவனப்படுத்தி, எதிர்கால தலைமுறையினருக்கு பயன்தரக்கூடிய ஒரு கண்காட்சியகம் ஏற்ப்படுத்துதல்.
5. கே.பி அவர்களின் மகன் மறைந்த கைலாசம் அவர்கள் பெயரில் தொலைகாட்சித் துறையைச் சேர்ந்த ஒருவருக்கு சிறந்த படைப்பாளி விருது அளித்தல்.
6. கே.பி அவர்களைப் பற்றிய புத்தகங்களை வெளிக் கொணர்வது. அதில் முதல் புத்தகம் ஜுலை 9, 2015 அன்றுவெளிவர இருக்கிறது. இதை எழுதியவர் இயக்குனர் வசந்த் சாய்.
இது போன்ற பல பணிகளை மேற்கொள்ள உள்ளோம். எங்களது பணி சிறந்து விளங்கிட தங்களுடைய மேலான ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் புஷ்பா கந்தசாமி
CASTRO RAHUL
354 Views
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' திரைப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் எழுப்பிய பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த்- சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்த "லிங்கா' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி வெளியானது.
வெளியான முதல் வாரத்திலிருந்து இந்தப் படத்துக்கு எதிரான பிரச்சாரத்தை அதன் விநியோகஸ்தர்கள் சிலர் ஆரம்பித்தனர். இந்தப் படத்தால் தங்களுக்குப் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி பிச்சைப் போராட்டம் அறிவித்தனர்.
இப்பிரச்னையில் ரஜினிகாந்த் நேரடியாகத் தலையிட்டு தயாரிப்பாளர்களிடம் இருந்து நஷ்டத் தொகையைப் பெற்றுத்தர வேண்டும் என விநியோகஸ்தர்கள் வலியுறுத்தி வந்தனர் இந்நிலையில், இப்பிரச்னையை ரஜினிகாந்த் முடித்து வைத்துள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத் தலைவர் கலைப்புலி தாணு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஒரு பெரிய தொகையை இழப்பீடாகக் கொடுத்து "லிங்கா' திரைப்படம் தொடர்பான பிரச்னைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்தத் தகவலை 10 நாள்களுக்கு முன்பே "லிங்கா' படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மூலம் எங்களுக்குத் தெரிவித்து விட்டார். அந்தத் தொகையும் எங்களுக்கு வந்து விட்டது. எங்களிடம்தான் உள்ளது.
இந்தத் தொகையை விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பிரித்துக் கொள்வதில்தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
எனவே, இனி இந்தப் பிரச்னைக்கும் ரஜினிகாந்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிரச்னையை சுமுகமாக தீர்த்து வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தமிழ்த் திரையுலகின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
CASTRO RAHUL
622 Views
மெல்லிய இடையாள் என்றும் இஞ்சி இடுப்பழகி என்றுப் பெண்களை பாராட்டுவது சங்க காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. இன்று அந்த அடைமொழியை, வர்ணனையை விரும்பும் பெண்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே வருகிறது.
இதைக் காசாக்கத்தான் எண்ணற்ற விவாதங்கள், ஆலோசனை கூட்டங்கள், வர்த்தக விளம்பர யுத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. பரவலாக பேசப்படும் இந்த விஷயத்தைத்தான் பி வி பி சினிமா நகைசுவை மிளிர சொல்ல வருகிறது.
பழம்பெரும் இயக்குனர் ராகவேந்திர ராவ் அவர்களின் மகனும், தெலுங்கில் பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியவருமான கே .எஸ். பிரகாஷ் தனது இயக்கத்தில் 'இஞ்சி இடுப்பழகி' என்ற தலைப்பில் இந்தப் படத்தை இயக்குகிறார்.
படம் குறித்து இயக்குனர் பிரகாஷ் கூறும்போது'
இஞ்சி இடுப்பழகி என்ற இந்தத் தலைப்பே கதை சொல்லும். உடல் வாகைப் பற்றிய படம் என்பதால் உலகமே போற்றும் ஆணழகனும், பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகைக் கொண்ட அனுஷ்காவும் தான் நடிக்க வேண்டும் என்பதை எந்த விவாதமும் இன்றி ஒருமனதாகத் தீர்மானித்தோம்.
அப்படி ஒரு அபூர்வ ஜோடியான ஆர்யாவும் அனுஷ்காவும் நடிக்கும் பொழுது அதை கண்கவர் வண்ணத்தில் பதிவு செய்ய நீரவ் ஷாவே பொருத்தமானவர் என்பதால் அவருடன் இணைந்து பணி செய்கிறேன்.. செவிகளுக்கு தேனூட்டும் இசையைத் தர மரகதமணி இசையமைக்கிறார்.
எனது தகப்பானார் ராகவேந்திர ராவ் அவர்களுக்கு தமிழ் திரை உலகில் இருக்கும் மரியாதையையும், நன்மதிப்பையும் கண்டு வியந்து போனேன். நானும் அவர் வழியில் நல்ல திரைப்படங்களை இயக்கி அந்த நற்பெயரையும் ரசிகர்களையும் சம்பாதிப்பேன்," என்றார் நம்பிக்கையுட ன்.
இன்று 'இஞ்சி இடுப்பழகி' படத்தின் பூஜை ஏ வி எம் அரங்கில் உள்ள பிள்ளையார் கோவிலில் விமரிசையாக நடந்தது. பல்வேறு நட்சத்திரங்கள் , தொழில் நுட்ப கலைஞர்கள் , தயாரிப்பாளர்கள் என திரை உலக பிரமுகர்கள் திரண்டு வந்து படக் குழுவினரை வாழ்த்தினர்.
===== CASTRO RAHUL ===
355 Views
இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது பரபரப்பான இசை வேலைகளின் இடையே தனது நண்பன் ரத்திந்திரன் ஆர் பிரசாத்தின் குறும்படத்தை படத்துக்கு நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
‘ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்' (Swayers Corporations) என்ற இக்குறும்படம் பிரான்ஸ் நாட்டில் நடக்கும் கேன்ஸ் 2015 திரைப்பட விழாவுக்குத் தேர்வாகியுள்ளது. முழுக்க முழுக்க சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் படமாக்கப்பட்டுள்ள ‘ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்' குறும்படத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் பசாக் கேசிலர் பிரசாத் மற்றும் ஹக்கன் கண்டார்லி சார்பாக இசையமைப்பாளர் ஜிப்ரான் பொறுப்பேற்று தயாரித்துள்ளார்.
இதுகுறித்து ஜிப்ரான் கூறுகையில், "ரத்திந்திரன் எனது சிறு வயது நண்பர். நல்ல சினிமா பற்றிய தேடுதல் உடையவர். பல சர்வதேச திறைபடங்களில் பணியாற்றியுள்ளார். இவர் ஜெர்மனியில் இயக்கிய Frullings Erwachen என்ற படத் தொகுப்பு விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
சினிமாவில் சாதிக்கவேண்டும் என்று துடிப்புடன் இருப்பவர். இருவரும் பல வருடங்களுக்கு முன் குறும் படம் ஒன்றை தயாரித்த்துள்ளோம், அதுவும் சர்வதேச அளவில் பேசப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தயாரிப்பு வேலைகளில் இறங்கியது நல்ல அனுபவமாய் இருந்தது.

‘ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்' குறும்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வானது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தயாரிப்பாளர்கள் மற்று எனது நண்பன் ரத்திந்திரனுக்கு வாழ்த்துக்கள்," என்றார்.
படத்தை இயக்கிய ரத்திந்திரன் கூறுகையில், "ஒரு ரசாயன நிறுவன அதிகாரியை கொல்வதற்கு செல்லும் சுற்று சூழல் ஆர்வலரின் பயணம் தான் கதை. 30நிமிடம் ஓடக்கூடிய இந்த த்ரில்லர் கதையில் பாடலோ பின்னணி இசையோ கிடையாது. ஆனாலும் ஜிப்ரான் இப்படத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளராக எனக்கு பக்க பலமாய் இருந்தார். எனது ஒளிப்பதிவாளர் ஃபரூக் கே பாஷா மற்றும் ஜிப்ரான் ஆகியோருடன் பணிப்புரிந்தது மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது," என்றார்.
ஜிப்ரான் மற்றும் ரத்திந்திரன் R பிரசாத் இருவரும் பிரான்சில் மே 13 முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கும் ‘ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்' திரையிடலுக்கும் அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
கஸ்ரோ ராகுல்
290 Views
இந்தப் படத்தில் உள்ள பாட்டியைத் தெரிகிறதா… யெஸ்.. ராகவா லாரன்ஸ்தான். காஞ்சனா 2 படத்தில் அவர் போடும் கெட்டப்புகளில் இந்த சூனியப் பாட்டி வேடமும் ஒன்று.
வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள காஞ்சனா 2 படத்தின் first look சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்த நாளே அந்தப் படத்தின் இன்னொரு ஸ்டில் வெளியானது.
அதில் ராகவா லாரன்ஸ் மிக வித்தியாசமாக ஒரு சூனியக்கார கிழவி மாதிரி வேடத்தில் தோன்றி மிரட்டுகிறார். இந்த போட்டோதான் இப்போது சமூக வலைத் தளங்களில் பரபரவென பரவிக் கொண்டுள்ளது.
காஞ்சனா படத்தில் நான்கு வேடங்களில் நடித்துள்ளார் ராகவா லாரன்ஸ். அவருக்கு ஜோடியாக டாப்சி நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் தோன்றுகிறார் அட்சலி. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ராகவா லாரன்ஸ்.
தெலுங்கிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் படம் வெளியாகிறது. தமிழுக்கு இணையாக தெலுங்கிலும் படத்துக்கு வியாபாரம் பேசப்பட்டு வருகிறது.
=====CASTRORAHUL=====
375 Views
364 Views


452 Views
280 Views
340 Views
296 Views
275 Views
623 Views
391 Views





446 Views