தமிழின் இப்போதைய முன்னணி இசையமைப்பாளர் கொலைவெறி அனிருத்தான். விஜய்யின் படத்திற்கு இசையமைத்த பிறகு முன்னணிக்கு வந்து விட்டார்.
இந்நிலையில், தெலுங்கு சினிமா உலகமும் இவரை அழைக்க தெலுங்கில் இவர் ஒரு பெரிய நடிகரின் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆனார் ..ஆனால், தலயின் 56 க்கு இசையமைக்க வாய்ப்பு வர உடனே அந்த வாய்ப்பை தவிர்த்திருக்கிறாராம் இந்த செல்பி புள்ள.
தெலுங்கு வாய்ப்பு இழக்கப்பட்டது தொடர்பான கவலை இல்லையா என கேட்டதற்க்கு, இவர் சொல்லும் காரணம், தலயின் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு வந்தது தனக்கு கிடைத்த பாக்கியம் என்று பரவசப்பட்டுள்ளார் அனிருத்.
-பிரஷாந்த்-