பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருந்தாலும், சில காலங்கள் தனது ஹிட் படத்தினை இரசிகர்கள் சுவைக்க வழங்கமுடியாமல் திணறி வந்தார் நடிகர் ஜெயம் ரவி. துடிப்பான நடிப்பு மற்றும் அழகான ஹீரோவாக வலம் வந்தாலும், ஏனோ அவருக்கான தனித்துவ இடம் இன்னும் கிடைக்கவில்லை.
கடுமையாக போராடி வரும் ஜெயம் ரவிக்கு இவ்வருடம் பிரபலமான வெற்றியைக் கொடுக்கும் வருடமாக அமையவுள்ளது. ஏன் என்று கேட்கிறீங்களா? இங்க வந்து கேளுங்க.
ஜெயம் ரவி, ஹன்ஷிகா நடிப்பில் ரோமியோ ஜூலியட் அத்தோடு ரவி த்ரிஷா, அஞ்சலி நடிப்பில் அப்பாடக்கர் இவை மட்டுமில்லாமல், த்ரிஷாவும் ரவியும் நடித்துள்ள பூலோகமும் இழுபறி நிலையில் உள்ளது. எனவே, இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வரவுள்ளது. எனவே, எப்படியும் இந்தப் படங்கள் மூன்றும் பெரும் வரவேற்பைப் பெறும் என்பது எல்லோருடையதும் நம்பிக்கை. வரட்டும், நாங்களும் சேர்ந்து வாழ்த்துவோம்!!
-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-