பலருக்கு பலர் போல வாழ ஆசை. இன்னும் சிலருக்கு பலருக்கு உறவை பிறக்க வேண்டும் என்கின்ற ஆசைகள் தொற்றிக் கொள்வது வழமைதான். இப்படி இப்பொழுது ஒரு பிரபலத்துக்கு புதிதாய் ஒரு ஆசை துளிர்விட்டுள்ளது.
அதாவது, பல கவர்ச்சியான வேடங்களில் நடித்திருந்தாலும், தனிப்பட்ட வாழ்வில் ஏராளமான சோகங்களை சுமந்திருக்கின்றவர் நடிகை ஷகீலா. அவரது படங்களில் தான் பல்வேறுபட்ட பாத்திரங்களை சுமந்திருந்தாரே தவிர, நிஜ வாழ்க்கையில் மிகவும் சுமைகள் அவருக்கு !!
இந்நிலையில், அண்மையில் ஒரு நேர்காணலை வழங்கியுள்ள ஷகீலா, அதில் ''எனக்கு நடிகர் உலக நாயகன் கமல்ஹாசனின் சகோதரியாக, அதிலும் தங்கையாக பிறக்க எனக்கு ஆசை. அவரது நடிப்பில் கட்டுண்டவள் நான்..'' என்று வெளிப்படையாக பேசியுள்ளார் ஷகீலா.
பலரும் இதற்க்கு ஆட்சேபித்துள்ள நிலையில், இது எனது தனிப்பட்ட விருப்பம். இதில் தலையிடவோ, மாற்றுக் கருத்துக்கள் முன்வைத்து விமர்சிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது என்கிறார் அம்மணி. அதுவும் ஒரு வகையில் சரிதான்.
-கோடம்பாக்கக் குருவி-