கடந்த 2013 ஆம் ஆண்டு அம்பாறையில் இடம்பெற்ற தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, ஜே.வி.பியினர் ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அம்பாறை முன்னாள் மாவட்ட செயலாளர் நீல் டி அல்விஸ், மற்றும் அம்பாறை நகர சபை தலைவர் இந்திக நலின் ஜயவிக்கிரமச ஆகியோருக்கு எதிராகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டை பதிவு செய்வதற்கு முன்பாக எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த ஜே.வி.பியின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி;னர் வசந்த பியதிஸ்ஸ, தமது முறைப்பாடு தொடர்பில் பாரபட்சமின்றி விசாரணை இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற மிக் வானூ}ர்தி கொள்வனவு தொடர்பில், மோசடிகளுக்கு எதிரான முன்னணி, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தது.
இதன்காரணமாக அவர் அண்மையில் ஆணைக்குழுவில் முன்னிலையாக வாக்குமூலம் அளித்திருந்தார்