ARRஇன் இசையில் அனிருத்
Anirud sings in ARR Music - ARRஇன் இசையில் அனிருத்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
ஷங்கர் இயக்கத்தில்
விக்ரம் நடித்துவரும் திரைப்படம் 'ஜ'. இந்த திரைப்படத்தில் விக்ரம் கொஞ்சம் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றுகிறார். மிக கஷ்டப்பட்டு எடையை குறைத்து மெலிந்து ஒல்லியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக எமி ஜெக்சன் நடிக்கின்றமையும் குறிப்பிடதக்க விடயம். இதன் படபிடிப்புகள் அதிக செலவில் வெளிநாடுகளில் படமாக்கப்படுகிறது இது அனைவரும் அறிந்ததே.
ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இவரின் இசையில்
அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார்;. தமிழ் திரையுலகில், ஒரு இசையமைப்பாளரின் இசையில் இன்னொரு இசையமைப்பாளர் பாடுவது புதிதல்ல. பிற இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள அனிருத் A.R.ரஹ்மானின் இசையில் பாடுவது இதுவே முதல் தடவை.
இவ் விடயத்தை இயக்குனர் சங்கர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார். படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. பாடல் வெளியீட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக கனடாவில் நடாத்த திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். ரஹ்மானின் இசையில் அனிருத்தின் பாடலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.