இரண்டரை வயது இருக்கும்போதே மணிரத்னம் இயக்கிய 'அஞ்சலி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாமிலி, அதன்பின்னர் தைப்பூசம், எங்க பாப்பா, துர்கா, செந்தூர தேவி, தேவர் வீட்டு பொண்ணு போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
பின்னர் தனது உயர்கல்வியில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். இருப்பினும் சினிமா சம்மந்தமாகவே படிப்பை தொடர்ந்தார். இப்பொழுது கற்கைகள் நிறைவடைய மீண்டும், கதாநாயகியாக தனது பயணத்தை ஆரம்பிக்க எத்தனித்துள்ளார்.
இதனடிப்படையில், ஷாமிலி இயக்குனர்களிடம் கதை கேட்க ஆரம்பித்துள்ளார். நல்ல கதை கிடைத்ததும் படத்தில் உடனடியாக களமிறங்க அம்மணி ஆயத்தம். அத்தோடு, நம்ம தல அஜித்தும் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், தனது மனைவியின் தங்கை படத்தில் அஜித் நடிப்பாரா அல்லது இல்லையா என்பது தொடர்பில் இன்னும் தகவல்கள் வாவில்லை. பொறுத்திருந்து அறிந்து கொள்வோம். -கோடம்பாக்கக் குருவி-