வடகொரிய பெண்களை அங்குள்ள அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தமது பாலியல் இச்சைக்கு இரையாக்கி வருவது தொடர்பில், சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கவலை வெளியிட்டுள்ளது.
வடகொரியாவில் பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுவது அன்றாட நிகழ்வு போன்றாகிவிட்டது என்று அந்த அமைப்பு தெரிவிக்கிறது.
இத குற்றச் செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் தண்டிக்கப்படாமை காரணமாக அவர்கள் மீண்டும் மீண்டும் இந்த குற்றச்செயல்களை அரங்கேற்றிவருகின்றனர் என்று கூறப்படுகிறது.
அங்குள்ள 40 வயதுடைய பெண் ஒருவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், அங்குள்ள ஆண்களுக்கு பெண்கள் விளையாட்டு பொருளாக இருப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
அங்கு பாலியல் வன்கொடுமை சாதாரணாகி விட்ட நிலையில், இந்த செயற்பாட்டை குற்றமாக கருதமுடியாத நிலையில் அங்குள்ள பெண்கள் வாழ்ந்து வருவதாக அந்தப் பெண்மணி தெரிவிக்கிறார்.
அங்குள்ள அதிகாரிகள் பெண்களை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்து தங்கள் இச்சைகளை தீர்த்துக்கொள்வதாக
அவர் மேலும் வேதனைப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த துன்பத்தில் இருந்து வடகொரியப் பெண்களுக்கு நீட்சி கிடைக்குமா என்ற ஏக்கத்தில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளநிலையில், இந்த செயற்பாட்டை குற்றமாக அறிவிக்கவேண்டும் என்றும் கோரியுள்ளது.