சூர்யா நடித்த ஏழாம் அறிவு படமானது முக்கிய காட்சிகளையும், கதை அம்சத்தையும் சீனாவை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தது. அதாவது போதி தர்மம் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு தற்காப்பு கலையை கற்றுக்கொடுத்ததாக அந்த கதையை முருகதாஸ் தயாரித்திருந்தார் .
அதனால் அந்த படத்தின் பெரும் பகுதி சீனாவில் படமாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கத்தி படத்தை போன்று அட்லி
இயக்கும் விஜய் படத்தை கொல்கத்தாவில் படமாக்க திட்டமிடப்பட்டிருந்தது ,ஆனால் அந்த படத்தின் படப்டிப்புகளை சீனாவில் ஆரம்பிக்க உள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுவும் இதுவரை யாரும் பெரிதாக கண்வைக்காத இடத்தில் தான் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது ,அட்லி விஜயிடம் அவ்விடங்களை வீடியோ எடுத்து காண்பித்துள்ளராம்.சீனாவில் இரண்டு பாடல்களும் முக்கிய காட்சிகளும் படமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.