பார்ப்பதற்கு அழகாகவும், எல்லோருக்கும் பிடித்த, பழங்காலத்து எடைக்கலாகவும் பாவிக்கப்பட்டது தான் குன்றி மணி. அதாவது, பேச்சு வழக்கில் இதனை குண்டு மணி என அழைப்போம். முத்து, பவளம் போல், இதை ஆபரணங்களில் பயன்படுத்தியவர்களும் உண்டு. அந்தளவுக்கு கொள்ளை அழகு.
இவ்வளவு அழகான இந்தக் குன்றி மணியில், ஒரு மனிதனைக் கொல்லும் அளவுக்கு விஷம் உண்டு என்றால் நம்பமுடியாதல்லவா?
ஆனால் உண்மை, உலகிலேயே, தாவரத்திலிருந்து பெறப்படும் விஷத்தில் ,இந்தக் குன்றிமணிக்கு மூன்றாவது இடமாம்.
என்னதான் குன்றிமணியில் விஷம் இருந்தாலும் ,இதன் வேர் மற்றும் இலைகள், சித்த மருத்துவத்துக்கு அதிகம் பயன்படுகிறதாம்.
இருமல், சளி, குடல் வலி,பித்தம் ,வெண்குஷ்டம், இன்னும் சில தோல் நோய்களுக்கும்,நரம்பித்தளர்ச்சி , உடல் வலி ஆகியவற்றுக்கும் கூட மிகச்சிறந்த மருந்து தானம் இந்த குன்றிமணி.
அத்தோடு முடி கொட்டுபவர்க்களுக்கும் ,இதன் இலை மற்றும் வேரைப் போட்டு ,எண்ணெய் காய்ச்சி வைத்தால் மிகச்சிறந்த பலன் கிடைக்குமாம்.
கொடிய விஷமுள்ள தாவரத்திலும் எத்தனை பலன்கள் பார்த்தீர்களா?