சர்வதேசமே திரும்பி பார்க்கும் அல்லது அனைவர் பார்வையையும் தன் பக்கம் திருப்பிய உலக நாயகன் கிம் ஜாங் உன் தான்.
வடகொரியா நாட்டின் அசராத அதிபர், உலக நாடுகளையே தன்பக்கம் எதிர்ப்பான விமர்சன ரீதியில் சம்பாதித்தவர். இப்போது இவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் பின்னர், அவர் சம்மதித்த நற்பெயரும் வரலாற்று முக்கியத்துவம் மிகு செயலாகும். ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா நடத்தி வந்தது.
இந்த மூர்க்கத்தனமான செயற்பாடு காரணமாக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தமது கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இதன் காரணமாக வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இதனால் கொரிய தீப கற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் முக்கிய சந்திப்பொன்றை மேற்கொண்டார்கள்.
அப்போது அணு ஆயுதங்களை அழிக்கவும், ஏவுகணை சோதனை நடத்துவதை நிறுத்தவும் வடகொரியா ஒப்புக் கொண்டது. இந்த சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்பட்டது. இந்த நடவடிக்கையின் அடுத்த கட்டமாக இரண்டு நாட்டு தலைவர்களும் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவுசெய்யப்பட்டது.
இதன் பிரகாரம் வியட்நாம் ஹனோயில் நாளையும் நாளை மறுதினமும் இந்த பேச்சு வார்த்தைகள் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், புகையிரதத்தில் வியட்நாம் தலைநகர் ஹனோய் சென்றடைந்துள்ளார். சுமார் 2½ நாட்களாக 4 ஆயிரம் கி.மீட்டர் (2500 மைல்) பயணம் செய்து, இன்று வியட்நாம் எல்லையில் உள்ள டாங் டாங் நகருக்கு சென்றுள்ளார். வியட்நாம் வந்த வடகொரிய அதிபர் கிம்முக்கு அந்நாடு உற்சாக வரவேற்பை கொடுத்துள்ளது. இதன்போது கிம்க்கு விசேட ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டடுள்ளது.
இதன்போது பாடசாலை மாணவர்கள் வெள்ளை சீருடையுடன் வடகொரியா நாட்டு தேசிய கொடிகளை அசைத்து அவருக்கு வரவேற்பு அளித்தனர். கிம் வருகையையொட்டி டாங் டாங் நகரில் இருந்து ஹனோஸ் வரை 170 கி.மீ. தூரத்துக்கு வீதிகள் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. குறித்த பகுதி உயர் பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமானப்படை விமானத்தின் மூலம் புறப்பட்டு இன்று மாலை ஹனோஸ் செல்கின்றார்.
இந்த நிலையில் கிம்முடன் ஆன சந்திப்பு குறித்து டிரம்ப் இரண்டு தடவைகள் ட்வீட் செய்துள்ளார். அதில், அணு ஆயுதங்களை வடகொரியா முற்றிலும் அளித்துவிட்டால் பொருளாதாரத்தில் முழு நிறைவு பெற்று சக்தி வாய்ந்த நாடாக திகழும். அது கிம் எடுக்கும் புத்திசாலிதனமான முடிவில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு டுவிட்டர் செய்தியில் கிம்முடன் ஆன 2-வது சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும் என தான் எதிர்பார்ப்பதாக பதிவிட்டுள்ளார். இதனிடையே டிரம்ப் -கிம் வருகையை யொட்டி வியட்நாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, துப்பாக்கி ஏந்திய ராணுவமும், பொலிசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.