Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
27
கவர்ச்சியாக நடித்துள்ளேன் ; ஆனால் ஆபாசமில்லை ; ஓவியா

SooriyanFM Gossip - கவர்ச்சியாக நடித்துள்ளேன் ; ஆனால் ஆபாசமில்லை ; ஓவியாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,665 Views
“90 எம்.எல். படத்தில் அரைகுறை உடையணிந்து, இரட்டை அர்த்த வசனம் பேசி, ஆபாச காட்சியில் நடித்தது ஏன்?” என்பதற்கு நடிகை ஓவியா விளக்கம் அளித்தார்.

ஓவியா நடித்து திரைக்கு வர இருக்கும் ‘90 எம்.எல்.’ படத்தை ‘அழகிய அசுரா’ என்ற பெண் டைரக்டர் இயக்கியிருக்கிறார். இவருடைய உண்மையான பெயர், அனிதா உதீப். ‘90 எம்.எல்.’ படத்துக்காக தனது பெயரை, ‘அழகிய அசுரா’ என்று மாற்றியிருக்கிறார். இந்த படத்துக்கு சிம்பு இசையமைத்திருப்பதுடன், ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறார்.


படத்தில் ஓவியா இரட்டை அர்த்த வசனம் பேசி, அரைகுறை உடையுடன் ஆபாச காட்சியில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. படம் விரைவில் திரைக்கு வர இருப்பதையொட்டி ஓவியா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஓவியா அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ‘90 எம்.எல்.’ படத்தில் அரைகுறை உடை அணிந்து, இரட்டை அர்த்த வசனம் பேசி, ஆபாச காட்சியில் நடித்திருப்பது ஏன்?

பதில்:- ஆபாசம் என்று எதை கூறுகிறீர்கள்? பெண்கள் என்றாலே அழுது கொண்டு சோக வசனம் பேசி நடிக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா? நான் நிர்வாணமாக நடிக்கவில்லை. கற்பழிக்கும் காட்சியில் நடிக்கவில்லை. ரசிகர்கள் என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ, அதை கொடுப்பது என் கடமை. உடை அணிவது பெண்களின் சுதந்திரம். அவரவர் விருப்பப்படி உடை அணிவதற்கு உரிமை இருக்கிறது. அதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.

இது, ஆணாதிக்கத்துக்கு எதிரான படம். கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் ஏற்ப நடிப்பதில் தப்பு இல்லை. படத்தில் நான் ஏற்று நடித்த கதாபாத்திரம் என்ன கேட்டதோ, அதைத்தான் செய்து இருக்கிறேன். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது. சினிமா தியேட்டர்களில் புகை பிடித்தால் என்ன வரும்? என்பதை பார்த்ததில் இருந்து புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன். ரசிகர்கள் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை ‘90 எம்.எல்.’ படத்தில் ஓரளவு நிறைவேற்றி விட்டேன். படத்தில் நான் கவர்ச்சியாக நடித்து இருக்கிறேன். ஆபாசமாக நடிக்கவில்லை.

கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் உள்ள இடைவெளி எது என்று கூற முடியுமா என்று கேட்டதுக்கு, நீங்கள் பார்க்கிற கோணத்தில்தான் அந்த இடைவெளி இருக்கிறது. சினிமா, பொழுதுபோக்கு சாதனம். அதில், பொழுதுபோக்கு அம்சங்களை காட்டுவதில் தப்பு இல்லை. எனக்கென்று ரசிகர்கள் ஒரு இடம் வைத்து இருக்கிறார்கள். என்னை நம்பி வருபவர்களை நான் ஏமாற்ற மாட்டேன். இது, ஜாலியான படம். பெண்கள் யாருக்கும் பயப்படக்கூடாது என்ற கருத்து இந்த படத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top