இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள், நமக்கு மற்றுமொரு போர் தேவையில்லை என்று அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற Malala yousafzai வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புல்வாமா தாக்குதல், அதற்கு பதில் தாக்குதல், மீண்டும் விமானத் தாக்குதல், அதற்கு பதிலடி என்று மாறி மாறி போர் சூழலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தற்போது உள்ளன. இதன்போது, பாகிஸ்தானை தாக்குவதற்காக சென்ற இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவ பிடியில் தற்போது உள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவிவருகிறது. இவற்றை கவனித்த Malala yousafzai தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில் ”நோபல் பரிசு பெற்றவர், யூனிசெஃபின் அமைதிக்கான தூதர் என்ற முறையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையில் எல்லையில் பதற்றம் அதிகரித்து வருவதால் எல்லையில் வசிக்கும் மக்கள் மீது அக்கறை கொண்டு நான் இதை கூறுகிறேன்.
அனைவருக்கும் போரின் கொடுமைகள் தெரியும். பழவாங்குவது நல்ல பதிலடி தாக்குதலாக ஒருபோதும் இருக்காது. போர் ஆரம்பித்துவிட்டால் அது அபூர்வமாகத்தான் முடியும். பல லட்சணக்கான மக்கள் போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நமக்கு மற்றுமொரு போர் தேவையில்லை. தற்போது போரின் ஆபத்தில் சிக்கியுள்ள மக்களை இந்த உலகம் கண்டுகொள்ளவில்லை. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும், இந்திய பிரதமர் மோடியும் கடினமான நேரங்களில் உண்மையான தலைமைப் பண்பை காண்பிக்க வேண்டும்.
இருவரும் அமர்ந்து பேசி, கைகுலுக்கி பேச்சு வார்த்தை மூலம் தற்போதுள்ள மோதல் மற்றும் காஷ்மீர் பிரச்சனையை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உயிரிழப்புகளை தவிர்க்க இந்தியா - பாகிஸ்தான் பேச்சு வார்த்தையை சர்வதேச சமுகம்ஆதரிக்க வேண்டும். இரு நாடுகளின் குடிமக்களுக்கும் அவர்களது எதிரி தீவிரவாதம், படிப்பறிவின்மை, வறுமை என்று நன்கு தெரியும். இரு நாடுகளும் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.