நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தான் பாரதி.இவருக்கு 18 வயது. இவர் கல்லூரியில் கல்வி கற்று வருகிறார்.ஒரு வக்கீலாக வரவேண்டும் என்பதுதான், இவருடைய கனவு.அந்த எண்ணத்தை ,வெறும் கனவாக்கி விடாமல், நனவாக்கும் புதுமை பெண்ணாக, இந்தப் பாரதி திகழ்கிறார் என்றால் நிச்சயம் மிகையாகாது.
தினமும், இவரை கல்லூரிக்கு அவர் அம்மாவான தேவகி, தூக்கிக் கொண்டு தான் செல்கிறாராம்.
காரணம் ,இந்தப் பெண் 2½ அடி உயரம் தான்.தன் மகள் பாதுகாப்பாக கல்லூரிக்கு சென்று வரவேண்டும் என்பதற்காக, தேவகி, ஒவ்வொரு நாளும், காலையிலேயே வீட்டு வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, மகளுடன் கல்லூரிக்குச் செல்கிறார்.
கிட்டத்தட்ட 18.கி.மீ. பயணம் செய்கின்றார்கள்.பின்னர் மாலை வரை கல்லூரியிலேயே நின்று, கல்லூரி முடிந்ததும், மகளைத் தூக்கி கொண்டு ,பஸ் ஏறி வீட்டுக்கு கொண்டுவருகிறார்.
இந்த பாரதி என்ற பெண், தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு, மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் இரண்டாம் இடமும் பெற்றதோடு ,இன்னும் பல சாதனைகளுக்கும் சொந்தக்காரி.
தன்னுடைய தாயின் ஆசைப்படியும், தன்னுடைய விருப்பப்படியும் படித்து முடித்து ,நல்ல ஒரு வேலைக்கு ,அதுவும் வக்கீல் வேலைக்குச் செல்வதே ,தனது மிகப் பெரும் லட்சியம் என்றும் கூறுகிறார்.
தன் மகளின் கனவுக்காக, வயிற்றில் சுமந்ததோடு மட்டுமல்லாமல், இன்னும் தன் இடுப்பிலும் சுமக்கிறார். அன்னையின் அன்புக்கு ஈடு, இவ்வுலகில் வேறேதும் இல்லை.நம் கண் கண்ட தெய்வம்.