‘கமரகட்டு’ என்ற படத்தை இயக்கியவர் ராம்கி ராமகிருஷ்ணன். இவர் ஏற்கனவே ‘இதயம் திரையரங்கம்’ என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக 40 லட்சத்து 60 ஆயிரம் ரூபா தொகையை கடனாக சவுகார்பேட்டையை சேர்ந்த அசோக் என்ற வர்த்தகரிடம் வாங்கியுள்ளார் .
அந்த பணத்திற்கு ஈடாக சொத்து பத்திரம் ஒன்றையும் கொடுத்துள்ளார். ஆனால் சொன்ன திகதியில் குறித்த கடன் தொகையை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அசோக் ராம்கி ராமகிருஷ்ணன் மற்றும் இந்த மோசடியோடு தொடர்புபட்ட இன்னும் சிலர் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அந்த குழு கடந்த 27ம்-திகதி மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.