கடந்த 2012 ல் பங்களாதேஷ் நாட்டுக்கான சவுதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றிய கலாப் அல் அலி, டாக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலைக்குற்றம் புரிந்தார்கள் என்ற சந்தேகத்தில் 5 பேர் மீது வழக்கு தொடர்ந்து அவர்கள்தான் தூதுவரை கொலை செய்தார்கள் என, டாக்கா விரைவு நீதிமன்றத்தில் மரண தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. பின்னர், இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் 4 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட ஐவரில் எஞ்சிய ஒரே ஒரு குற்றவாளியான சைபுல் இஸ்லாம் மாமுன் என்பவருக்கு, காசிப்பூரில் உள்ள மத்திய சிறையில் நேற்றிரவு 10 மணியளவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.