இப்போதெல்லாம் பெண்களுக்கு போட்டியாக ஆண்களும் அலங்கரிப்பதில் தனி நேரம் ஒதுக்கி வருகின்றார்கள்.
Hair cut செய்வது, புருவம் திருத்துவது, டை அடிப்பது, facial செய்வது, ஆடை அலங்காரம், நடை உடை பாவனை என்று ஆண்கள் இப்போதெல்லாம் முன்பைவிட ரொம்ப பிஸி. இதில் தாடி வைப்பது ஒரு தனி ஸ்டைல். ஆண்கள் தாங்களும் அழகாக, தனித்துவமாக இருக்கவேண்டு என்பதற்காக சில வேளைகளில் எதை எப்படி செய்ய வேண்டும் என்று அறியாது தவறுகளை செய்கிறார்கள். அதனால் ஆண்களின் சில விடயங்களில் அக்கறை கொள்ளவேண்டிய நிலையில் இருக்கின்றோம்.
இதில் இன்று நாங்கள் ஆண்களின் தலை முடி பராமரிப்பு தொடர்பில் பார்ப்போம்.
ஆண்கள் தலைமுடி பராமரிப்பில் பல தவறுகளைச் செய்கிறார்கள். முடி இருக்கும்போது பத்திரமாகப் பார்த்துக்கொள்ளாமல், கொட்டிய பிறகு கவலைப்பட்டு பிரயோஜனமில்லை. இது ஆண்களுக்கு பெண்களுக்கும் பொருந்தும். ஆண்கள் தலை குளிக்கும்போது, அழுக்குப் போக வேண்டும் என்பதற்காக விரல்களால் நன்றாக தேய்த்து தலை கழுவுவார்கள். அதேபோன்று குளித்த பிறகும் துணியால் ஈரம் போக அழுத்தித் துடைப்பார்கள். இப்படி ஈரமான முடியைக் கடினமாகத் தேய்த்தால் தலை முடிகள் பாதிக்கப்பட்டு, அதிகப்படியான முடி உதிர்ந்துவிடும். (அடக் கடவுளே இது தெரியாம போச்சே ) இனியாவது ஈரமான தலையைக் கடினமாகத் தேய்ப்பதைத் தவிருங்கள்.
சில ஆண்கள் வேறு ஒரு தவறை விடுவார்கள். அவசரமாக குளிக்க வேண்டும் என்பதற்காக தலைக்கு ஷாம்பு போட்டு நீரில் சரியாக அலசாமல், நுரை போகும் அளவில் மட்டும் தலையை அலசிவிட்டு வருவார்கள். இப்படி தொடர்ந்து செய்தால் ஷாம்புவில் உள்ள கெமிக்கல் மண்டை ஓட்டில் படிந்து, ஆரோக்கியமான முடிக்கு ஆப்புவைத்துவிடும். அலெர்ட் நண்பா அலெர்ட்....... சிலர் எல்லோரையும் விட அழகா ஸ்டைல்லா இருக்கவேண்டும் என்பதற்காக தினமும் தலைக்குக் கழுவிக் கொள்வார்கள். இப்படித் தினமும் தலைக்குக் குளிப்பதால், ஸ்கல்ப்பில் உள்ள ஈரப்பசை முற்றிலும் வெளியேறி, அதிக வறட்சியைச் உருவாக்கி விடும் என்று வைத்தியர்கள் சொல்கிறார்கள். இது இப்படியே தொடரும்பட்சத்தில், தலை இருக்கும். ஆனால், முடி இருக்காது.
இன்று பெண்களுக்கு போட்டியாக ஆண்களுக்கும் அதிகமான Hair style டிரெண்டாகிக்கொண்டிருக்கின்றன. Hair style செய்தால் ஆண்கள் அழகாக இருப்பார்கள். ஆனால் மோசமாக, கண்டமாதிரி Hair style செய்தால் கிடக்கிற முடி இல்லாமல் போய்விடும். பொருத்தமில்லாத ஹேர்ஸ்டைலைச் செய்துகொண்டால், அது முடி உதிர்வதை அதிகப்படுத்திவிடும்.
குறிப்பாக, சில்கி ஹேர் தன்மையுள்ளவர்கள், நீளமான ஹேர்ஸ்டைல்களை வைக்காமல் இருப்பது நல்லது. தற்காலிக அழகுக்கு ஆசைப்பட்டு, முடியை மொத்தமாக இழக்க வேண்டாமே நண்பா ............! ஸ்டைலாக்குகிறேன் என்ற பெயரில் தலைமுடிக்கு Hair ஜெல், ஸ்பிரே, கலரிங் போன்றவற்றை சிலர் பயன்படுத்துவார்கள். இவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால், தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதை நண்பர்கள் அநியாயத்திற்கு மறக்கிறீர்களே. எனவே, கண்ட கண்ட பொருள்களைத் தலைக்குப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.
ஒருசில ஆண்கள் எப்போதும் தலையை சீப்பால் வாரிக்கொண்டே இருப்பார்கள். இதுவும் தவறு. (என்னய்யா ஒண்டுமே செய்ய விடமாட்டிங்களா? ) சீப்பை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினாலும், முடி பாதிப்புக்குள்ளாகி உதிர ஆரம்பிக்கும். எனவே, ஒரு நாளைக்கு ஓரிரண்டு முறைக்குமேல் சீப்பு பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். வேண்டுமெனில், விரல்களால் நீவி கொள்ளுங்கள்.
என்ன நண்பர்களே மேலே நாங்க சொன்ன விடயங்களில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் உங்கள் தலை முடி எப்போதும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம்.