உதாரணத்திற்கு, இப்பொது சாதாரண கையடக்க தொலைபேசியை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். பால்குடி பாப்பா முதல், பல்லு விழுந்த ஆச்சி அப்புவரை ஸ்மார்ட் போன்தான் use பண்ணுகிறார்கள். உங்களுக்கு தெரியும், நாங்கள் SooriyanGossip பக்கத்தில் அண்மையில் ரோபோ ஒன்றை பயன்படுத்தி சீனாவின் முதன்மை செய்தி நிறுவனமான சின்ஹுவா, செய்தி வாசித்தமை தொடர்பில், தொழில் நுட்பத்தின் முன்னேற்றம் குறித்து செய்தி வெளியிட்டு இருந்தோம்.
உண்மையில் உலகில் தொழில்நுட்பங்களின் முன்னேற்றம் காரணமாக எல்லா நிறுவனங்களும் மக்களை கவர புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றன. இந்தநிலையில், சுவீடனில் பிரபல Corporate நிறுவனம் ஒன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வேலைக்கு பணியாளர்களை தெரிவு செய்யும் பொறுப்பில் Robot ஒன்றை அமர்த்தியுள்ளது. ஆமாங்க Inteview செய்யும் ரோபோ குறித்துத்தான் சொல்கிறோம்.
குறித்த Robot மிகவும் நுட்பமான கணினி மொழிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டதாக, இதனை வடிவமைத்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். சுவீடனில் உள்ள சுமார் 73 சதவீதம் இளைஞர் யுவதிகள் வேலையில்லாத திண்டாட்டத்தில் உள்ளதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஏன் அதிக வீதமானவர்களுக்கு தொழில் கிடைக்கவில்லை என்று பார்த்தபோது, இவர்களின் பெயர், பாலினம், வயது மற்றும் தோற்றம் போன்றவற்றினால் வேலை கிடைக்கவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிர்ச்சியாக இருக்கிறது இல்லையா? இப்படிப்பட்ட காரணங்களினால் Corporate நிறுவனங்களில் Interview நடத்தி வேலைக்கு ஆட்கள் எடுக்கும் "HR " பணிக்காக ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் முகச்சாயலை கொண்டுள்ள இந்த ரோபோ ''தங்காய் '' என்று அழைக்கப்படுகின்றது. ஹா....... ஹா.............. இந்த ரோபோவின் சிறப்பு என்னவென்றால், மனிதர்கள் பக்கச்சார்பாக செயற்படும் குணம் கொண்டு இருப்பார்கள். இந்த ரோபோவோ மிகுந்த நடுநிலை தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆகவே, நேர்முகத் தேர்விற்கு வருவோர், ரோபோவுடன் மைக்ரோ போன் மூலம் உரையாடல்களை மேற்கொள்ளமுடியும். இந்த ரோபோ தற்போது ''Swedish '' மட்டுமே பேசக்கூடிய முறையில் programme கொண்டதாகும். தற்போது இந்த ரோபோ ஆங்கிலத்தில் பேச பயிற்சி எடுத்து வருகின்றது. ஆக, ஒரு சர்வதேச மொழியில் இலகுவில் நேர்முகத் தேர்வை இந்த ரோபோ மிக விரைவில் மேற்கொள்ளும் என்று நம்பப்படுகின்றது.
சுவீடனில் உள்ள மிகப்பெரிய Corporate நிறுவனத்தின் HR அமைப்பினர், கடந்த ஆண்டு அக்டோபரில் இதனை சோதனை செய்துள்ளார்கள். குறித்த தங்காய் மனிதர்களை விட மிகச் சிறந்த முறையில் பணியாளர்களை தெரிவு செய்யும் என்று நம்பப்படுகின்றது.
இனி இந்த ரோபோ செய்யும் நேர்முகத்தேர்வு மூலம் பல இளைஞர்கள் யுவதிகள் வேலை வாய்ப்பை பெறும் அதிஷ்டத்தை பெறுகிறார்கள்.
இந்த புதிய தகவலை அறிந்த பல இளைஞர் யுவதிகள், இந்த ரோபோ வடிவமைப்பாளர்களை பாராட்டி வருகின்றார்கள். அப்பா, நாங்களும் பாராட்டிடலாம்.