அட்லி - விஜய் கூட்டணியில் தெறி, மெர்சல் வெற்றி பெற்றதால் விஜயின் அடுத்த படமும் அட்லியின் இயக்கத்தில் வரவுள்ளது. விஜயின் 63வது படம் என்பதால் இந்த படத்திற்கு தளபதி 63 என இப்போதைக்கு பெயரிடப்பட்டுள்ளது.
தளபதி 63 படத்தின் நாயகி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் அட்லியின் முதல் படமான ராஜா ராணியில் நடித்துள்ளார் என்பது அனைவரும் தெரிந்த விடயமே.
தளபதி 63 படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது இன்று இப் படப்பிடிப்பில் நயன் நடிக்கும் முதல் காட்சி படமாக்கப்படவுள்ளது.
ராஜா ராணியில் ஒரு கிருஸ்தவ தேவாலயத்தில் ஆர்யா நயன்தாராவை மணம் முடிப்பது போன்ற காட்சியே முதலில் படமாக்கப்பட்டது. அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதால்
விஜய் நயன் இருவருக்கும் ஒரு கிருஸ்தவ தேவாலயத்தில் திருமணம் நடப்பது போன்ற காட்சியே இன்று படமாக்கப்படவுள்ளது.
இந்த காட்சி நயன்தாராவிட்கும் அட்லிக்கும் ராசியான காட்சியாக இருப்பதால் இந்த படத்திலும் நயனுக்கு முதல் முதலில் இந்த காட்சியே படமாக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.