ஆரம்பகாலங்களில் இளைஞர்கள், யுவதிகளின் விருப்பத்திற்குரிய நடிகைகளில் ஒருவராக இருந்த சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவரது ரசிகர்கள் பலர் மிகுந்த வேதனை அடைந்தனர்.
எனினும் பல போராட்டங்களின் பின்னர், சோனாலி பிந்த்ரே புற்றுநோய் தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட்டார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், '' மரணப்படுகைக்கு சென்று திரும்பி விட்டதால், மரணம் குறித்த அச்சம் எழவில்லை'' என தெரிவித்துள்ளார்.
இவரது கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.