வடிவுக்கரசியின் வீட்டில் இருந்த அவரது தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக, காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பல முக்கிய கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து, புகழ் பெற்ற நடிகை வடிவுக்கரசி.
இவர் தற்போது சின்னத்திரையிலும் மிளிர்ந்து வருகின்றார். இளம் வயதிலேயே திரைப்படத்தில் அறிமுகமான வடிவுக்கரசியின் நடிப்பை கண்டு, பல முன்னணி இயக்குனர்கள் இன்றும் இவருக்கான பட வாய்ப்புக்களை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை வடிவுக்கரசி கடந்த 10 நாட்களாக தனது மக்களின் வீட்டில் தங்க இருந்துள்ளார்.
பின்னர் வீடு திரும்பிய அவர் தனது பூட்டப்பட்டிருந்த வீடு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியைந்துள்ளார்.
உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 8 பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து வடிவுக்கரசியின் சகோதரர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதகா தெரியவருகின்றது.