இந்தியாவின் ஹரியாணா மாநிலத்தில் சுமார் ஒன்றரை வயதுடைய குழந்தை, ஒன்று 60 அடி ஆழமான ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளதாகவும் குழந்தையை மீட்கும் தீவிர பணியில் மீட்புக்குழுவினர் மற்றும் கவால்துறையினர் ஈடுபட்டுவருவதாக நாம் தெரிவித்திருந்தோம்.
ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுவாசிக்க தேவையான ஒக்சிஜன் குழாய்கள் மூலம் செலுத்தப்பட்டது. இருட்டில் பார்க்கும் படக்கருவி மூலம் குழந்தையின் அசைவுகள் கண்காணிக்கப்பட்டன. அதன்பின் குழந்தைக்கு தேவையான உணவுகள் வழங்கப்பட்டன ஆழ்துளை கிணற்றிலிருந்து 20 அடி தூரத்தில், குழி தோண்டி, குழந்தையை பாதுகாப்பாக மீட்க சுரங்கம் தோண்டப்பட்டது. 48 மணி நேர தீவிர மீட்பு பணிக்குப்பின் குழந்தை இன்று மீட்கப்பட்டது