குறிப்பாக புகைபிடிப்பது, வெற்றிலை, பாக்குப் போடுவது, இருமுறை பல் துலக்காமல் இருப்பது போன்றவற்றால், பற்களில் கறை படியும். அத்துடன் எமது பற்களுக்குள் ஏராளமான பக்டீரியாக்கள் உருவாகி, பற்களில் சொத்தை விழும்.
இந்த பிரச்சினையை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டு விட்டால், பிற்காலங்களில் எமது பற்கள் பாரியளவில் பாதிக்கப்படும் என, பல் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே எமது பற்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பல் மருத்துவரைச் சந்தித்து `ஸ்கேலிங்’ முறையில் பற்கறையை அகற்றி விடலாம். அதன் பின்பு ‘பிளீச்சிங்’ முறையில் பற்களைச் சுத்தம் செய்து பற்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
காலையில் எழுந்ததும் ஒருமுறை, இரவு தூங்கச் செல்லும் முன்பு ஒருமுறை என கட்டாயமாக இருமுறை பல் துலக்க வேண்டும். மூன்று நிமிடங்களுக்குப் பல் துலக்குவது நல்லது. பற்களை வேக வேகமாகவும், முன்னும் பின்னுமாகவும் அழுத்தமாகத் தேய்த்தால், பற்கள் விரைவில் தேய்ந்து விடும்.
புகைபிடிப்பது, புகையிலை போடுவது, தேநீர் மற்றும் குளிர்பானங்களை அதிகமாக அருந்தாமல் இருப்பதால், பற்களின் ஆரோக்கியம் பேணப்படுவதுடன், வாய்துர்நாற்றமும் ஏற்படாது.