ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளை சாப்பிடுவது, இதய நோய் மற்றும் முன்கூட்டியே மரணத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கும் என்று குறித்த ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதற்கு காரணம் முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கும் அதிகளவிலான கொழுப்பு என, ஆராய்ச்சியாளர்கள் வாதிடுகின்றனர். இதனிடையே பெரிய முட்டை ஒன்றில் சுமார் 185 மில்லிகிராம் கொழுப்பு இருக்கும் என அமெரிக்காவின் விவசாயத்துறை திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மறுபுறம் நாள் ஒன்றுக்கு 300 மில்லிகிராம் கொழுப்பை கொண்ட முட்டையை உட்கொள்ளலாம் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.
இதனை அடுத்து, முட்டை குறித்த ஆய்வுகள் மேலும் தீவிரமடைந்தன. இதன்படி நாள் ஒன்றுக்கு 300 மில்லிகிராம் எடுத்துக் கொள்வது, இதய நோய்க்கான அபாயத்தை 17 சதவீதம் அளவிற்கும், முன்கூட்டியே மரணம் ஏற்படுவதை 18 சதவீதம் அளவிற்கும் உயர்த்தியதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் பழங்கால சமுதாயத்தினர், முட்டையை ஆரோக்கியம் தரும் உணவாக கருதினர். பெண்கள் தமது மாதவிடாய் காலங்களில், அதிகமாக முட்டையை சாப்பிடுவார்கள்.
முட்டையை சாப்பிடுவதன் மூலம், எமது உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும் என, இன்றும் பல முதியவர்கள் உறுதிப்பட கூறி வருகின்றனர்.
தினமும் காலை வேளையில் முட்டையை பச்சையாக குடித்து, உடல் ஆரோக்கியத்தை அதிகரித்த காலம் சென்று, தற்போது முட்டையை எதிர்க்கும் காலம் வந்து விட்டது.